வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : வியாழன், 26 டிசம்பர் 2024 (12:24 IST)

தோனியப் பாத்தே பத்து வருஷம் இருக்கும்… மீண்டும் சி எஸ் கேவுக்கு செல்வது குறித்து அஸ்வின்!

ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் பார்டர் கவாஸ்கர் தொடருக்கு நடுவே தோனி போலவே ஓய்வை அறிவித்து பரபரப்பை உருவாக்கினார் அஸ்வின். டெஸ்ட் தரவரிசையில் பவுலராகவும் ஆல்ரவுண்டராகவும் முதல் ஐந்து இடங்களுக்குள் இருக்கும் அஸ்வினை வெளிநாட்டு  தொடர்களின் போது அணி நிர்வாகம் ஒரு அறிமுக பவுலரைப் போல பென்ச்சில் உட்கார வைக்கின்றனர்.

அடுத்த இரண்டு போட்டிகளிலும் அவருக்கு வாய்ப்பு இருக்காது என அணி நிர்வாகம் தெரிவித்த பின்னர்தான் இந்த முடிவை அவர் எடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது. சர்வதேசக் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றாலும் தொடர்ந்து க்ளப் போட்டிகளில் விளையாடுவேன் என அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் மீண்டும் சி எஸ் கே அணிக்காக தோனியோடு விளையாடுவது பற்றி அவர் பேசியுள்ளார். அதில் “நான் வீரர்கள் அறையில் தோனியைப் பார்த்தே 10 வருஷம் ஆகியிருக்கும். அவரே இப்போது என்னைப் புது மனிதராகதான் பார்ப்பார். நானும் அவரை அப்படிதான் பார்ப்பேன். புனே அணியில் அவரைக் கேப்டன் பதவியில் இருந்து நீக்கினாங்க. ஆனா மீண்டும் சென்னை அணிக்கு வந்து அவர் கப் அடிச்சாரு. அவர்கிட்ட கத்துக்க ஏராளமான விஷயங்கள் இருக்கு. அவர் வேற லெவல் ஆளு” எனப் பேசியுள்ளார்.