Daily Horoscope

‘கிரிக்கெட்டர் அஸ்வின்’ இன்னும் ஓய்வு பெறவில்லை… சென்னையில் அஸ்வின் நெகிழ்ச்சி!

Written By vinoth
Updated: வியாழன், 19 டிசம்பர் 2024 (14:46 IST)
ஆஸ்திரேலிய தொடருக்கு நடுவே தோனி போலவே அஸ்வினும் ஓய்வை அறிவித்துள்ளார். கடந்த தசாப்தத்தில் டெஸ்ட் விளையாடி வரும் பவுலர்களில் தனிச்சிறப்பு வாய்ந்தவர் அஸ்வின். 106 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 516 விக்கெட்கள் வீழ்த்தியுள்ளார்.

டெஸ்ட் தரவரிசையில் பவுலராகவும் ஆல்ரவுண்டராகவும் முதல் ஐந்து இடங்களுக்குள் இருக்கும் அஸ்வினை வெளிநாட்டு  தொடர்களின் போது அணி நிர்வாகம் ஒரு அறிமுக பவுலரைப் போல பென்ச்சில் உட்கார வைக்கின்றனர். அடுத்த இரண்டு போட்டிகளிலும் அவருக்கு வாய்ப்பு இருக்காது என அணி நிர்வாகம் தெரிவித்த பின்னர்தான் இந்த முடிவை அவர் எடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது. 

இந்நிலையில் சென்னை வந்த அவருக்கு உணர்ச்சிப்பூர்வமான வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது பேசிய அவர் “எனைக்கு இப்படி ஒரு வரவேற்புக் கிடைக்கும் என நான் நினைக்கவில்லை. கடைசியாக 2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பை வென்று வந்தபோது இப்படி ஒரு வரவேற்புக் கிடைத்தது. கிரிக்கெட்டர் அஸ்வின் இன்னும் ஓய்வு பெறவில்லை. இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின்தான் ஓய்வு பெற்றுள்ளார். என்னால் முடிந்தவரை சி எஸ் கே அணிக்காக விளையாடுவேன்” எனக் கூறியுள்ளார்.

எல்லாம் காட்டு

வைபவ் சூர்யவன்சி அணியில் இல்லையா? என் மனைவியே கேள்வி கேட்டார்: ஸ்ரீகாந்த் விமர்சனம்..

பாகிஸ்தான் அமைச்சர் கையால் கோப்பையை வாங்க மறுத்த இந்திய மகளிர் அணி.. ஆசிய கோப்பை மைதானத்தில் பரபரப்பு..

மகளிர் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர்.. 8 முறையாக இந்திய அணி சாம்பியன்..

இந்தியா - பாகிஸ்தான் மேட்ச் மிஸ்ஸிங்.. இந்தியா - இலங்கை இறுதிப்போட்டியில் மோதல்..!

சிஎஸ்கே அணியின் 25% பங்குகளை கேட்டாரா எம்.எஸ்.தோனி? சிஎஸ்கேவின் மதிப்பு ரூ.17200 கோடி.. அப்ப 25% எவ்வளவு?

அடுத்த கட்டுரையில்
Show comments