Daily Horoscope
✕

சென்னை வந்த அஸ்வினுக்கு மக்கள் உணர்ச்சிபூர்வ வரவேற்பு!

Written By vinoth
Updated: வியாழன், 19 டிசம்பர் 2024 (13:36 IST)
பிரிஸ்பேன் டெஸ்ட் போட்டியை இந்திய அணி போராடி சமன் செய்த மகிழ்ச்சியில் ரசிகர்கள் இருந்தபோது அதிர்ச்சி செய்தியாக அஸ்வின் தன்னுடைய ஓய்வு முடிவை நேற்று அறிவித்தார்.  தற்போது டெஸ்ட் விளையாடி வரும் பவுலர்களில் தனிச்சிறப்பு வாய்ந்தவர் அஸ்வின். 106 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 516 விக்கெட்கள் வீழ்த்தியுள்ளார்.

அஸ்வின் திடீரென இப்படி ஓய்வை அறிவிக்கக் காரணம் நீண்ட நாட்களாக அணியில் நடந்து வரும் தொடர் அவமரியாதைதான் காரணம் என சொல்லப்படுகிறது. டெஸ்ட் தரவரிசையில் பவுலராகவும் ஆல்ரவுண்டராகவும் முதல் ஐந்து இடங்களுக்குள் இருக்கும் அஸ்வினை வெளிநாட்டு  தொடர்களின் போது அணி நிர்வாகம் ஒரு அறிமுக பவுலரைப் போல பென்ச்சில் உட்கார வைக்கின்றனர். அடுத்த இரண்டு போட்டிகளிலும் அவருக்கு வாய்ப்பு இருக்காது என அணி நிர்வாகம் தெரிவித்த பின்னர்தான் இந்த முடிவை அவர் எடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது. 

கடைசியாக செய்தியாளர்களை சந்தித்த போது ‘எனக்குள் இன்னும் கிரிக்கெட் மீதமிருக்கிறது’ என்று அவர் கூறியிருந்தார் என்பது ஆதங்கத்தின் வெளிப்பாடாக இருக்கலாம். இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் இருந்து சென்னை திரும்பிய அஸ்வினை அவரின் சுற்றத்தார் உணர்ச்சிப்பூர்வமாக வரவேற்றுள்ளனர். அவரின் தந்தை அஸ்வினை முத்தமிட மிகவும் உணர்ச்சிப் பூர்வமாக அஸ்வின் காணப்பட்டார்.

எல்லாம் காட்டு

ஜோஸ் பட்லருக்கு தொடையில் அறுவை சிகிச்சை.. 2027 உலகக் கோப்பைத் தொடரில் விளையாடுவாரா?

வெற்றி பெற 421 ரன்கள்.. அதிகபட்ச சேஸிங் ரன்களை எட்டுமா தென்னாப்பிரிக்கா...

டெல்லியில் இருந்து அகமதாபாத்துக்கு கிரிக்கெட் போட்டி மாற்றமா? பிசிசிஐ விளக்கம்...

ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டில் சதமடித்து அசத்தல்.. இந்திய அணியில் மீண்டும் இடம்பெறுவாரா ஜடேஜா?

3-வது டி20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றி.. அபிஷேக் ஷர்மா அதிரடி அரைசதம்...

அடுத்த கட்டுரையில்
Show comments