Daily Horoscope
✕

டுவிட்டரில் தென்னாப்பிரிக்கா வீரருடன் மல்லுக்கட்டிய அஸ்வின்

Updated: செவ்வாய், 20 பிப்ரவரி 2018 (13:20 IST)
தென்னாப்பிரிக்கா அணியின் முன்னாள் கேப்டன் கிப்ஸ்ம் இந்திய வீரர் அஸ்வினும் டுவிட்டரில் மோதி கொண்டனர்.
 
இந்திய அணியின் சூழற்பந்து வீச்சாளர் அஸ்வின் ‘நைக்‘ நிறுவனத்தின் புதிய ஷூ குறித்து டுவிட்டரில் பதிவு செய்திருந்தார். இந்த பதவிற்கு தென்னாப்பிரிக்க வீரர் கிப்ஸ் ''நீங்க இனிமே வேகமா ஓடுவீங்கன்னு நம்புறேன்'' என கிண்டலாக பதில் அளித்தார்.
 
இதற்கு அஸ்வின் ''கண்டிப்பாக உங்களை விட வேகமாக ஓட முடியாது. ஆனாலும் சூதாட்டம் செய்யாமல் விளையாட வேண்டும். அதுதான் எனக்கு சாப்பாடு போடுகிறது. என்று குறிப்பிட்டுருந்தார், அதற்கு கிப்ஸ் ''நான் செய்த காமெடியை நீங்கள் சரியாக புரிந்து கொள்ளவில்லை என்று நினைக்கிறேன்'' என்று பதில் அளித்து சமாதானப்படுத்தி இருக்கிறார்.
 
இந்நிலையில் அஸ்வின் ''நானும் காமெடியாகத்தான் சொன்னேன். நீங்கள் தான் தவறாக புரிந்து கொண்டு இருக்கிறீர்கள். நாம் இதை ஒருநாள் ஒன்றாக சாப்பிடும் போது பேசி தீர்த்துக் கொள்ளலாம்'' என்று குறிப்பிட்டுள்ளார்.  

எல்லாம் காட்டு

வைபவ் சூர்யவன்சி அணியில் இல்லையா? என் மனைவியே கேள்வி கேட்டார்: ஸ்ரீகாந்த் விமர்சனம்..

பாகிஸ்தான் அமைச்சர் கையால் கோப்பையை வாங்க மறுத்த இந்திய மகளிர் அணி.. ஆசிய கோப்பை மைதானத்தில் பரபரப்பு..

மகளிர் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர்.. 8 முறையாக இந்திய அணி சாம்பியன்..

இந்தியா - பாகிஸ்தான் மேட்ச் மிஸ்ஸிங்.. இந்தியா - இலங்கை இறுதிப்போட்டியில் மோதல்..!

சிஎஸ்கே அணியின் 25% பங்குகளை கேட்டாரா எம்.எஸ்.தோனி? சிஎஸ்கேவின் மதிப்பு ரூ.17200 கோடி.. அப்ப 25% எவ்வளவு?

அடுத்த கட்டுரையில்
Show comments