Daily Horoscope

’அந்த வார்த்தையை சொல்லக் கூடாது என கோலி அன்புக்கட்டளை இட்டுள்ளார்’ –ABD பகிர்ந்த தகவல்!

Written By vinoth
Updated: வெள்ளி, 30 மே 2025 (12:43 IST)
17 ஆண்டுகளாக ஆர் சி பி அணியும் அதன் ரசிகர்களும் வழி மேல் விழி வைத்துக் காத்திருந்த ஐபிஎல் கோப்பை, கைக்கெட்டும் தொலைவுக்கு இந்த முறை வந்துள்ளது. ஐபிஎல் தொடரில் இதுவரைக் கோப்பையே வெல்லாத அணி என்றாலும் அதிக ரசிகர்களைக் கொண்ட அணியாக உள்ளது ஆர் சி பி.

இதற்கு முன்னர் 3 முறை ஐபிஎல் இறுதிப் போட்டிக்கு அந்த அணி சென்றுள்ளது. 10 முறை ப்ளே ஆஃப் சுற்றுகளுக்கு சென்றுள்ளது. ஆனாலும் கோப்பைக் கனவு பலிக்கவில்லை. இதை வைத்தே மற்ற அணி ரசிகர்கள்  ‘ஆர்சிபி’ அணியைக் கலாய்ப்பதும் உண்டு. ஆர் சி பி அணியின் ஸ்லோகனான ‘ஈ சாலா கப் நம்தே (இந்த முறை கோப்பை நமக்குதான்)’ என்பதை வைத்து அதிகமாக அந்த அணி கேலி செய்யப்படுவதுண்டு.

ஆனால் இந்த ஆண்டு அந்த வாக்கியத்தை அவர்கள் எங்குமே பயன்படுத்தவில்லை. இதுபற்றி பேசியுள்ள அந்த அணியின் முன்னாள் வீரர் டிவில்லியர்ஸ் “ஆர் சி பி அணியின் நேரம் வந்துவிட்டது.  ஆர் சி பி இத்தனை தூரம் முன்னேறிவிட்டது. ஆனால் நான் ‘ஈ சாலா கப் நம்தே’ என்பதை சொல்ல கோலி என்னை அனுமதிக்க வில்லை. ஆனால் இந்த ஆண்டு நாங்கள் முழுமை அடைவோம்.” எனக் கூறியுள்ளார்.

எல்லாம் காட்டு

வைபவ் சூர்யவன்சி அணியில் இல்லையா? என் மனைவியே கேள்வி கேட்டார்: ஸ்ரீகாந்த் விமர்சனம்..

பாகிஸ்தான் அமைச்சர் கையால் கோப்பையை வாங்க மறுத்த இந்திய மகளிர் அணி.. ஆசிய கோப்பை மைதானத்தில் பரபரப்பு..

மகளிர் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர்.. 8 முறையாக இந்திய அணி சாம்பியன்..

இந்தியா - பாகிஸ்தான் மேட்ச் மிஸ்ஸிங்.. இந்தியா - இலங்கை இறுதிப்போட்டியில் மோதல்..!

சிஎஸ்கே அணியின் 25% பங்குகளை கேட்டாரா எம்.எஸ்.தோனி? சிஎஸ்கேவின் மதிப்பு ரூ.17200 கோடி.. அப்ப 25% எவ்வளவு?

அடுத்த கட்டுரையில்
Show comments