Daily Horoscope

கிறிஸ்துமஸ் தாத்தா என்பவர் யார் தெரியுமா?

Updated: வெள்ளி, 22 டிசம்பர் 2017 (18:08 IST)
 
மேற்கத்திய நாடுகளிலும் சில கீழை நாடுகளிலும் மட்டுமே காணப்பட்ட கிறிஸ்துமஸ் தாத்தா இன்றைக்கு உலகெங்கும் பரவி அவருக்கே உரித்தான சிவப்பு உடையில் வெண்தாடி, கண்ணாடி சகிதமாக வலம் வரத் தொடங்கி விட்டார்! சாண்ட்டா என்றும்  சாண்ட்ட கிளாஸ் என்றும் அன்போடு குழந்தைகள் குதூகலித்துக் கொள்வதை நாமறிவோம்! உலகில் எந்தக் கிறிஸ்தவக்  குழந்தையிடமும் சாண்ட்ட கிளாஸ் என்றால் அறியாத குழந்தைகளே இல்லை எனலாம்.
 
கிறிஸ்மஸ் தாத்தா இல்லாமல் இன்று எங்கும் கிறிஸ்துமஸ் கொண்டாடப்படுவதில்லை என்ற அளவுக்கு கிறிஸ்மஸ் தாத்தாவும், கிறிஸ்துமஸ்சும் ஐக்கியப்பட்டுப் போனது. கிறிஸ்மஸ் தாத்தா தோன்றிய விதம் குறித்து அலசினால் அவருக்கும்  ஒரு பின்னனி உண்டு என்பதை அறியலாம்! உண்மையில் புனித நிக்கோலஸ் தான் சாண்ட்டகிளாஸ் என்ற கிறிஸ்மஸ் தாத்தா  உருவாகக் காரணம் என்று சொல்லவேண்டும்.

அடுத்த கட்டுரையில்
Show comments