ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. கிறித்துவம்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 29 ஜூன் 2022 (08:02 IST)

பைபிள் கூறும் ஏலியின் வாழ்க்கை!

ஏலி சீலோம் தேவாலயத்தில் தலைமைக் குருவாக இருந்தார். இவரே நீதித் தலைவர். நீதித் தலைவர் என்பவர் அரசருக்கு அடுத்த நிலையில் இருப்பவர்.

 
ஏலி மிகுந்த இறையச்சமும், இறை பக்தியும் உடையவர். ஏலி நல்லவராக இருந்தாலும், அவருடைய பிள்ளைகள் ஒப்னிக்கும், பினகாசும் தைலைகீழாக இருந்தார்கள்.
 
கடவுளுக்கு பணி செய்த பெண்களிடமே தகாத உறவில் ஈடுபட்டிருந்தனர். யாராவது எதிர்த்துக் கேட்டால் வன்முறையைக் கையாண்டார்கள்.
 
ஏலி தன்னுடைய மகன்களிடம், நீங்க கடவுளுக்கு எதிராகவே தப்பு செய்றீங்களே இதெல்லாம் தப்பு என்றார். அவர்கள் கேட்கவில்லை. கடவுளின் கோபம் அவர்கள் மேல் விழுந்தது.
 
ஏலிகளிடம் இறையடியார் ஒருவர் வந்தார். கடவுளின் வார்த்தைகளை அவரிடம் சொன்னார். உன்னோடும் உன் மூதாதையோடும் என்றென்றைக்கும் கடவுளுக்காய் பணி செய்யும் என்ற கடவுளின் வாக்குறுதியை அவர் திரும்பப் பெற்றுக் கொண்டார். உங்கள் ஆற்றல் மற்றும் உங்கள் மூதாதை ஆற்றல் அழிக்கப்படும். 
 
நீங்கள் கடவுளை விட உங்கள் பிள்ளைகளை உயர்வாக நினைக்கிறீர்கள். உங்கள் குடும்பத்தில் முதியவர்களே இல்லாத நிலை வரும். உன்னுடைய இரு பிள்ளைகளும் ஒரே நாளில் மாண்டு போவார்கள் என்றார். ஏலி அதிர்ந்தார்.
 
கடவுள் ஏலியின் ஆலயத்தில் பணிபுரியும் சாமுவேல் எனும் சிறுவனிடம் தனது திட்டத்தை அசரீரி மூலம் தெளிவாக்கினார். காலங்கள் கடந்தன. சாமுவேல் வளர்ந்தார். இப்போது பெலிஸ்தியர்கள் இஸ்ரவேல் மக்களுக்கு எதிராகப் போரிட்டனர்.
 
இதி ஏலியின் இரு மகன்களும் பலியானார்கள்.  ஏலிக்கு அப்போது தொன்னூற்று எட்டு வயது. கடவுளின் உடன்படிக்கை பேழையும் கைப்பற்றப்பட்டது என்ற செய்தியை கேட்டவுடன் ஏலி அதிர்ந்து போய் நிலை தடுமாறி கீழே விழுந்தார்.
 
ஏலியின் வாழ்க்கை மூலம் ஒரு தந்தையின் கடமை தனது பிள்ளைகளின் பாவங்களைப் பொறுத்துக் கொள்ளாமல் சரியான பதையில் வழிநடத்துவது என்பதை சொல்கிறது.