வியாழன், 14 நவம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. கிறித்துவம்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 16 ஏப்ரல் 2022 (08:41 IST)

இயேசு உயிர்த்தெழுந்த ஞாயிறே ஈஸ்டர்!

இயேசு சாவிலிருந்து விடுதலை பெற்று உயிர் பெற்றெழுந்த நிகழ்வை நினைவு கூர்ந்து கத்தோலிக்கத் திருச்சபையும், பிற கிறிஸ்துவ சபைகளும் ஆண்டு தோறும் சிறப்பிக்கும் கொண்டாடப்படும் ஆகும். 

 
சனி மாலையிலேயே விழா தொடங்கும் என்பதால் பாஸ்கா திருவிழிப்பு அதை அடுத்து வரும் நாள் ஈஸ்டர் ஞாயிற்றிக்கிழமையின் தொடக்கம்.
 
மனித குலத்தை ஆழமாகப் பாதிக்கும் பாவம், சாவு ஆகியவற்றை இயேசு தம் சிலுவைச் சாவினாலும் உயித்தெழுதலாலும் வென்று மனித குலத்துக்கு புது வாழ்வு அளித்து அவர்கள் நிறவான பேரின்பம் அடைய வானக வழியை இயேசு திறந்தார் என கிறிஸ்துவர்கள் நம்புவதாய் கிறிஸ்துவ வழிபாட்டு ஆண்டின் மய்யமாக உள்ளது.
 
இயேசுவைப் பின்பற்றுபவர்களின் நம்பிக்கையின்படி கி.பி.27-33-இல் சிலுவையில் ஏசு அறையப்பட்டு அடக்கம் செய்யப்பட்டு மூன்றாம் நாள் மரணத்தில் இருந்து உயிர்த்ததைக் குறிக்கும் வகையில் கிறிஸ்தவர்களால் கொண்டாடப்படுவது உயிர்த்த ஞாயிறு அல்லது பாஸ்கா.
 
இது கிறிஸ்துவ ஆண்டில் மிக முதன்மையான திருநாளாகும், இந்நாள் புனித வெள்ளிக்கிழமையிலிருந்து மூன்றாம் நாளான ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது. ரோம் கத்தோலிக்கத் திருச் சபையில் இது எட்டு நாள் திருவிழாவாகும்.
 
கிறிஸ்தவர்களின் கொண்டாடும் பாஸ்கா பழைய ஏற்பாட்டு பாஸ்காவின் நிறை எனக் கருதுவர். இயேசு சாவினின்று வாழ்வுக்குக் கடந்து செல்லும் செயல் இங்கே திகழ்கிறது. அதைத் தொடர்ந்து ஏசுவை விசுவாசிக்கிறவர்கள் அவௌடைய மரணத்திலும், உயிர்த்தெழுதலிலும் தம்மை ஒன்றித்துக் கொண்டு தங்கள் அக வாழ்வுக்குச் சாவாக அமைகின்ற பாவத்திலிருந்து விடுவிக்கப்பட்டு இயேசு வாக்களிக்கும் புது வாழ்வுக்குக் கடந்து செல்கிறார்கள். 
 
இந்த உண்மை பாஸ்கா திருவிழாவின் போது கொண்டாடப்படுகிறது. கத்தோலிக்கத்திருச்சபையின் வழக்கப்படி இக்கொண்டாட்டத்தில் ஒளிவழிபாடு, இறைவாக்கு வழிபாடு, திருமுழுக்கு வழிபாடு, நற்கருணை வழிபாடு ஆகிய நான்கு பகுதிகள் உள்ளன.