புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. பட்ஜெட் 2021 - 2022
Written By Sugapriya Prakash
Last Updated : திங்கள், 1 பிப்ரவரி 2021 (13:00 IST)

பட்ஜெட் 2021: Live Updates !!

மத்திய அரசின் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியுள்ள நிலையில் 2021-22 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து வருகிறார். 
 
2021- 2022 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் விவரங்கள்: 
பட்ஜெட் உரையை 1 மணி நேரம் 50 நிமிடங்கள் வாசித்து முடித்தார் அமைச்சர் நிர்மலா சீதாராமன்
- தங்கத்திற்கான இறக்குமதி 12.5 சதவீதத்தில் இருந்து மீண்டும் 10 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது
- வரி ஏய்ப்பவர்களை கண்டறிய நவீன தொழில்நுட்பங்கள் கொண்டு வரப்படும்
- பிப். மாத செலவுகளை பூர்த்தி செய்ய 80,000 கோடி கடன் பெற மத்திய அரசு முடிவு 
-
 தனிநபர் வருமான வரி உச்சவரம்பு மாற்றம் இல்லாமல் தொடர்கிறது
- ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கான வரிச்சலுகை மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு
- வரித்தணிக்கை வரம்பு 5 கோடியில் இருந்து 10 கோடியாக உயர்வு
- குறைந்த விலை வீடுகளை வாங்குபவர்களுக்கான வரிச்சலுகை வரும் 2022ஆம் ஆண்டு வரை நீட்டிப்பு 
- சிறிய அளவிலான வருமான வரி சச்சரவுகளை தீர்த்து வைக்க புதிய குழு அமைக்கப்படும்
- பொருளாதாரத்தை சீரமைக்க 80,000 கோடி நிதி ஒதுக்கீடு 
- 2021ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஆளில்லா விண்கலத்தை இந்தியா விண்வெளியில் செலுத்தும்
- பொருளாதார நடவடிக்கையாக சென்னை உள்பட 5 முக்கிய மீன்பிடி துறைமுகங்கள் விரிவுப்படுத்தப்படும் 
- வெளிநாடு வாழ் இந்தியர்கள் தாயகம் திரும்பும் போது இரட்டை வரி விதிப்பு முறைக்கு ஆளாவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்
- 75 வயதுக்கு மேற்பட்ட ஓய்வூதியதாரர்கள் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய தேவையில்லை. ஓய்வூதியம், வட்டி ஆகியவற்றை மட்டுமே சார்ந்திருந்தால் அவர்களுக்கு விலக்கு அளிக்கப்படும்
- வரும் நிதியாண்டில் விவசாயிகளுக்கு ரூ.16.5 லட்சம் கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயம்
- வேளாண் பொருட்களை சந்தைப்படுத்தும் E-NAM திட்டத்தில் 1.68 கோடி விவசாயிகள் பதிவு செய்துள்ளனர்
- சூரிய ஆற்றல் கழகத்திற்கு ரூ.1,000 கோடி நிதி ஒதுக்கீடு
- ரூ.3,768 கோடியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு திட்டம் மின்னணு முறையில் மேற்கொள்ளப்படும்
- அரசின் அறிவிப்புகள் மற்றும் முக்கியத் திட்டங்களை அனைத்து மொழிகளிலும் மொழி பெயர்ப்பு செய்யும் திட்டம் அறிமுகம்
- எஸ்.சி, எஸ்.டி மாணவர்களுக்காக திருத்தப்பட்ட கல்வி உதவித் தொகை திட்டம் கொண்டு வரப்படும்
- ககன்யான் திட்டத்திற்காக 4 வீரர்கள் ரஷ்யாவில் பயிற்சி 
- சிறு, குறு தொழில்கள் வளர்ச்சிக்காக ரூ.15,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது
- மின்னணு பணப் பரிவர்த்தனையை ஊக்குவிக்க 1,500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு
- லடாக்கின் லே பகுதியில் புதிய மத்திய பல்கலைக்கழகம் உருவாக்கப்படும்
- பள்ளிக் கல்வித்துறையில் 100 புதிய சைனிக் பள்ளிகள் உருவாக்கப்படும். நாடு முழுவதும் 15 ஆயிரம் பள்ளிகளை மேம்படுத்த திட்டம்.
- சாலையோர வியாபாரிகளுக்கும் சமூக பாதுகாப்புத் திட்டம் விரிவுபடுத்தப்படும்
- சிறு நிறுவனங்களுக்கான மூலதனம் உச்சவரம்பு 2 கோடியில் இருந்து 20 கோடியாக உயர்வு
- விவசாயக்கடனாக 16.5 லட்சம் கோடி வழங்க இலக்கு
- தமிழகத்தில் கடல்பாசியை பதப்படுத்த புதிய வசதி ஏற்படுத்தப்படும்
- தமிழகத்தில் ஒருங்கிணைந்த பல்நோக்கு கடல் பூங்கா நிறுவப்படும்
- வேளாண் பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை நடைமுறை தொடரும்
- அரசின் தானிய கொள்முதல் மூலம் ஓராண்டில் ஒன்றரை கோடி விவசாயிகள் கூடுதலாக பயனடைந்துள்ளனர்
- IDBI வங்கியை முற்றிலும் தனியார்மயமாக்க முடிவு
- பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்று அடுத்த நிதி ஆண்டில் ரூ.1.75 லட்சம் கோடி நிதி திரட்ட இலக்கு 
- 2 தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் பங்குகள் விற்பனை செய்யப்படும்
- எல்.ஐ.சி நிறுவன பங்குகளை பொதுமக்களுக்கு விற்பனை செய்ய முடிவு
- துறைமுகங்களில் தனியார் பங்களிப்பு என்ற நிதியமைச்சர் அறிவிப்புக்கு "அதானி, அதானி" என எதிர்கட்சிகள் முழக்கம்
- பாரத் பெட்ரோலியம், ஏர் இந்திய நிறுவனங்களின் பங்குகளை விற்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது
- அரசு வங்கிகளுக்கு கூடுதல் மூலதனமாக 20 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு
- சுகாதரத்துறைக்கு 2.23 லட்சம் கோடி பட்ஜெட்டில் ஒதுக்கீடு
- காப்பீட்டுத் துறையில் அந்நிய நேரடி முதலீடு 49 சதவீதத்தில் இருந்து 74 சதவீதமாக அதிகரிப்பு
- வரும் நிதியாண்டில் ஒரு கோடி ஏழைக் குடும்பங்களுக்கு சமையல் எரிவாயு இணைப்பு வழங்கப்படும்
- வீடுகளுக்கு நேரடியாக கேஸ் விநியோகிக்கும் திட்டத்தில் கூடுதலாக 100 மாவட்டங்கள் இணைக்கப்படும்
- மின்சாரத்துறைக்கு 3.05 லட்சம் கோடி ஒதுக்கீடு
- சென்னை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு 63 கோடி ஒதுக்கீடு
- பெங்களூரு மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு 14 கோடி ஒதுக்கீடு
- கொச்சி மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு 1957 கோடி ஒதுக்கீடு
- ரயில்வே திட்டங்களுக்கு 1.10 லட்சம் கோடி ஒதுக்கீடு
- பேருந்து வழித்தடங்களை விரிவுபடுத்த 18,000 கோடி ஒதுக்கீடு
- மாநகரங்களில் மெட்ரோ மற்றும் பேருந்து வழித்தடங்களை விரிவாக்க திட்டம்
- 2023 ஆம் ஆண்டுக்குள் நாடு முழுவதும் அனைத்து அகல ரயில்பாதைகளை மின்மயமாக்க இலக்கு
- உள்கட்டமைப்பு வசதிக்கு 2021-22ஆம் நிதியாண்டில் 20 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு
- காற்று மாசை கட்டுப்படுத்த பட்ஜெட்டில் ரூ.2,217 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு
- தமிழகத்தில் ரூ.1.03 லட்சம் கோடியில் 3,500 கிலோமீட்டர் சாலைத் திட்டங்கள் செயல்படுத்தப்படும்
- மதுரையில் இருந்து கேரள மாநிலத்தின் கொல்லம் வரை நவீன சாலைகள் உருவாக்கப்படும்
- இந்தியாவில் உலக சுகாதார அமைப்பின் (WHO) கிளை தொடங்கப்படும்
- நாட்டில் புதிதாக மூன்று ஆண்டுகளில் 7 ஜவுளிப் பூங்காக்கள் தொடங்கப்படும்
- அடுத்த 3 ஆண்டுகளில் நாட்டின் அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்த 5 லட்சம் கோடி முதலீடு
- அடுத்த ஆண்டிற்குள் நாடு முழுவதும் 11,000 கிமீ தேசிய நெடுஞ்சாலை அமைத்து முடிக்கப்படும்
- மும்பை - கன்னியாகுமரி இடையே தொழில் வழித்தடம்
- கேரளாவில் தேசிய நெடுஞ்சாலை திட்டங்களுக்கு 65,000 கோடி ஒதுக்கீடு
- சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பை உறுதிப்படுத்த பழைய வாகனங்களை திரும்பப் பெறும் கொள்கை அறிமுகம்
- நாடு முழுவதும் 9 இடங்களில் உயிரியக் ஆய்வு மையங்கள் அமைக்கப்படும், 4 இடங்களில் வைரஸ் ஆய்வங்கள் அமைக்கப்படும்
- 2.87 லட்சம் கோடியில் இந்தியா முழுவதும் தண்ணீரை கொண்டு செல்லும் திட்டம்
- விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்குவதே அரசின் இலக்கு
- கொரோனா தடுப்பூசிக்கு மத்திய பட்ஜெட்டில் ரூ.35,000 கோடி நிதி ஒதுக்கீடு
- நகர்ப்புற தூய்மை திட்டத்திற்கு 1.41 லட்சம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு
- பிரதமரின் சுயசார்பு ஆரோக்கிய திட்டம்: ரூ.64,180 கோடி மதிப்பில் பிரதமரின் சுயசார்பு ஆரோக்கிய திட்டம் அறிமுகப்படுத்தப்படும்
சுயசார்பு இந்தியா திட்டத்தில் ரூ.27லட்சம் கோடிக்கு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன
- கொரோனாவிற்கு எதிரான போர் தொடரும். மேலும் இரண்டு தடுப்பூசிகள் விரைவில் நடைமுறைக்கு வரும் 
- இந்தியாவின் வேளாண் பொருட்களை சுமார் 100 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய புதிய திட்டங்கள்
- அனைத்து பெண்களும் கல்வி கற்று சுயசார்புடன் இருக்க வேண்டும் என்று மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது
- இந்தியா உலக வர்த்தகத்தின் மையமாக திகழும் வகையில் பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது 
- கொரோனா கட்டுப்படுத்தப்பட்டு இந்திய பொருளாதாரம் மீட்சி அடைந்து வளர்ச்சிப்பாதையில் பயணிக்க ஆரம்பித்துள்ளது 
சுயசார்பு இந்தியா திட்டம் 5 மினி பட்ஜெட்களுக்கு சமமானது. சுயசார்பு திட்டம் நமது நாட்டுக்கு புதிதல்ல - நிர்மலா சீதாராமன்
- முன்னெப்போதும் இல்லாத சூழலில் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறேன் - நிர்மலா சீதாராமன்
- நாடு சுதந்திரமடைந்ததற்கு பிறகு முதல் முறையாக காகிதமில்லா பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது
2021- 22ம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
மத்திய பட்ஜெட் தாக்கல் செய்ய பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல்
- இன்னும் சில நிமிடங்களில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில் பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவை கூட்டம் தொடங்கியுள்ளது.