1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. பட்ஜெட் 2016-2017
Written By Caston and Lenin
Last Modified: திங்கள், 29 பிப்ரவரி 2016 (12:23 IST)

கடலுக்கு அடியில் கச்சா எண்ணெய் உற்பத்தி: ஊக்க தொகை வழங்க மத்திய அரசு முடிவு

கடலுக்கு அடியில் கச்சா எண்ணெய் உற்பத்தி: ஊக்க தொகை வழங்க மத்திய அரசு முடிவு

மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தாக்கல் செய்து வரும் 2016-2017 ஆண்டிற்கான மத்திய பொது பட்ஜெட்டில் கடலுக்கு அடியில் கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் திட்டத்துக்கு கூடுதல் ஊக்கத்தொகை வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.


 
 
இந்தியாவின் முக்கிய தேவைகளில், நாம் அதிகம் இறக்குமதி செய்யும் கச்சா எண்ணெய் உற்பத்திக்கு முக்கியத்துவம் அளிக்கும் விதமாக, கடலுக்கு அடியில் கச்சா எண்ணெய் உற்பத்திக்கு கூடுதல் ஊக்கத்தொகை வழங்கப்படும் மத்திய பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.
 
மேலும், நடப்பு மாதம் வரை 5442 கிராமங்கள் மின் இணைப்பு பெற்றுள்ளது. 2018 மே 1 ஆம் தேதிக்குள் 100 கிராமங்கள் மின்மயமாக்கலை அடைய முடியும் என்று கருதப்படுகிறது என பட்ஜெட் தாக்கல் செய்த அருண் ஜெட்லி கூறினார்.
 
மேலும், 89 நீர்பாசன திட்டங்கள் விரைவாக செயல்படுத்தப்படும் எனவும், ரூ. 20,000 கோடி மதிப்புள்ள நீர்ப்பாசனம் நிதி, நபார்டு கீழ் அமைக்கப்பட ஒதுக்கப்பட உள்ளதாக அருண் ஜெட்லி கூறினார்.
 
இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என கூறிய நிதியமைச்சர், பயிர் சேதங்களுக்கு கூடுதல் இழப்பீடு வழங்கப்படும் எனவும், அடுத்த 3 ஆண்டுகளில் 5 லட்சம் ஏக்கர் இயற்கை வேளான்மைக்கு கொண்டுவரப்படும் எனவும் கூறினார்.