திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By Papiksha Joseph
Last Updated : செவ்வாய், 26 மே 2020 (09:09 IST)

கரண் ஜோஹர் வீட்டில் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி..!

இந்தியத் திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர் TV பிரபலம் என பன்முகன் கொண்ட கரண் ஜோஹர் பாலிவுட்டில் வெற்றியடைந்த இளம் திரைப்படத் தயாரிப்பாளர்களில் ஒருவராவாக பார்க்கப்படுகிறார். இவர் மும்பையில் தனது அம்மா மற்றும் இராட்த்தை குழந்தைக்ளுடன் வசித்து வருகிறார்.

இந்நிலையில் அவரது வீட்டில் வேலை பார்க்கும் பணியாளர் இருவருக்கு கொரோனா நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த செய்தி பாலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தத்தையடுத்து இது குறித்து விளக்கம் கொடுத்துள்ள கரண் ஜோஹர்,  " ஆம், என்வீட்டு பணியாளர் இருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து வீட்டில் இருந்த அனைவருக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்படத்தில் மற்ற யாருக்கும் நோய் தொற்று  இல்லை என்பது உறுதி செய்தனர்.

இருந்தாலும் நாங்கள் அனைவரும் அடுத்த 14 நாடுகளுக்கு எங்களை தனிமைப்படுத்திக்கொள்ள முடிவெடுத்துள்ளோம். மேலும் பாதிக்கப்பட்ட அந்த இருவரது உடல்நிலையில் கவனத்தை செலுத்தி சிகிச்சையும், அரவணைப்பையும் கொடுத்து அவரை நோய் தொற்றிலிருந்து மீட்டெடுப்போம் என நம்புகிறோம். வீட்டிற்குள் பாதுகாப்பாக இருப்போம் நோய் தொற்றை வெல்வோம் என கூறியுள்ளார்.