செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By VM
Last Updated : வியாழன், 20 செப்டம்பர் 2018 (11:44 IST)

சன்னி லியோனுக்கு கிடைத்த கவுரவம்!

பிரபல கவர்ச்சி நடிகை சன்னிலியோனுக்கு டெல்லியில் உள்ள மேடம் துஷாத் மியூசியத்தில் சிலை வைக்கிறார்கள்.
பல்வேறு கவர்ச்சி படங்களில் நடித்து இந்திய ரசிகர்களை கிறங்கடித்தவர் சன்னி லியோன். இவர் தற்போது தமிழில் வீரமாதேவி என்ற சரித்திர படத்தில் நடிக்கிறார். இது மட்டுமல்லாமல் தனது வாழ்க்கை சுயசரிதை படத்திலும் நடித்து வருகிறார். இந்த நிலையில் சன்னிலியோனுக்கு மெழுகு சிலை தயாராகி  உள்ளது. டெல்லியில் உள்ள மேடம் துஷாத் மியூசியத்தில் இந்த சிலையை வைக்கிறார்கள். அங்கு அமிதாப்பச்சன், ஸ்ரீதேவி உள்பட முன்னணி  நடிகர்–நடிகைகளுக்கும், அரசியல் கட்சி தலைவர்களுக்கும் மெழுகு சிலை வைக்கப்பட்டு உள்ளது. 
 
தனது மெழுகு சிலையை சன்னிலியோன் திறந்து வைத்து அருகில் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டார். இந்த சிலையை பார்த்து மகிழ்ந்த சன்னிலியோன்,  சிலையைக் கண்டு வியப்படைந்தார். சிலையை நேர்த்தியாகவும் சிறப்பாகவும் உருவாக்க பல நாட்கள் உழைத்தவர்களுக்கு பாராட்டுக்களை தெரிவித்தார்.  இதை பெரிய கவுரவமாக கருதுகிறார் சன்னி லியோன்...