சிறப்புப் பாடலுக்கு எமிரேட்ஸ் போன ஷாருக்கான்!
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் டங்கி படத்திற்காக சிறப்பு பாடலொன்றை படமாக்கியுள்ளார் ஷாருக்கான். சமீபத்தில் வெளியான டங்கி டிராப் 4 படத்தின் மீதான எதிர்பார்ப்பை, உச்சகட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளது.
ரசிகர்கள் ஒரு அற்புதமான திரை அனுபவத்திற்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர். இயக்குநர் ராஜ்குமார் ஹிரானி உணர்ச்சிகள் நிறைந்த, ஒரு மகத்தான மனதைக் கவரும் உலகத்தை வடிவமைத்திருக்கும் விதத்தைப் பார்வையாளர்கள் பாராட்டினாலும், படத்தின் மையத்தை அழகாக வெளிப்படுத்தும் பாடல்களையும் அவர்கள் பெரிதும் விரும்புகிறார்கள்.
இதுவரை வெளியான பாடல்கள் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், இப்போது அவர்களின் உற்சாகத்தை மேலும் உயர்த்தும் வகையில் மேலும் ஒரு அப்டேட் வந்துள்ளது. விளம்பர நோக்கங்களுக்காக கவனமாக வடிவமைக்கப்பட்ட “டங்கி” படத்திற்கென ஒரு சிறப்புப் பாடலைப் படமாக்க SRK ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்குச் சென்றுள்ளதாக தகவல்கள் வந்துள்ளது.
படக்குழுவிற்கு நெருக்கமானவர்கள் தந்த தகவலின் படி , "ஷாரூக் மற்றும் ஹிரானி ஆகியோர், செவ்வாய் இரவு சுஹானாவின் படத்தின் பிரீமியரின்போது வெளியிடும்படி இப்பாடலை மூன்று நாட்களில் படமாக்கியுள்ளனர். மிகக்குறைந்த குழுவினருடன் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் அபுதாபியின் புறநகர் பகுதிகளில் இப்பாடல் படமாக்கப்பட்டிருக்கிறது. ஐக்கிய அரபு எமிரேட்ஸில் SRK விற்கு மிகப்பெரும் ரசிகர் பட்டாளம் இருக்கிறது.
இந்நிலையில் SRKவின், பாடல் படப்பிடிப்பு பற்றிய செய்தி அவரது உள்ளூர் ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஷாருக்கானுடன், பூமன் இரானி, டாப்ஸி பண்ணு, விக்கி கௌஷல், விக்ரம் கோச்சார், அனில் குரோவர் உள்ளிட்ட நட்சத்திரக் குழு 'டங்கி' திரைப்படத்தில் நடித்துள்ளது.
இத்திரைப்படத்தை ஜியோ ஸ்டுடியோஸ், ரெட் சில்லீஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் ராஜ்குமார் ஹிரானி பிலிம்ஸ் வழங்குகிறார்கள், ராஜ்குமார் ஹிரானி மற்றும் கௌரி கான் இணைந்து தயாரித்துள்ளனர். அபிஜத் ஜோஷி, ராஜ்குமார் ஹிரானி மற்றும் கனிகா தில்லான் இணைந்து எழுதியுள்ளனர். டங்கி 2023 டிசம்பர் 21 ஆம் தேதி வெளியாகிறது.