வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By Papiksha Joseph
Last Modified: திங்கள், 6 ஏப்ரல் 2020 (11:38 IST)

இவ்ளோவ் அன்பு கொடுக்குற அளவுக்கு நான் என்ன பண்ணிட்டேன் - ரசிகரின் செயலால் திகழ்ந்த ராஷ்மிகா!

"கிரிக் பார்ட்டி" என்ற கன்னட படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை  ராஷ்மிகா மந்தனா. அதையடுத்து தெலுங்கு சினிமா பக்கம் சென்று அங்கு ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும் விஜய் தேவரக்கொண்டாவுடன் அவர் சேர்ந்து நடித்த படங்களான டியர் காம்ரேட், கீதா கோவிந்தம் உள்ளிட்ட படங்கள் சூப்பர் ஹிட் அடித்து தென்னிந்திய சினிமா உச்ச நடிகையாக வலம் வந்தார்.

தமிழில் நேரடியாக ஒரு படம் கூட இன்னும் நடிக்கவில்லை என்றாலும் ஏகப்பட்ட்ட தமிழ் ரசிகர்களின் பேவரைட் நடிகையாக மாறிவிட்டார்.  தற்போது நடிகர் கார்த்தியை வைத்து பாக்யராஜ் கண்ணன் இயக்கும் படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ராஷ்மிகா நடித்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று தனது 24வது பிறந்தநாளை கொண்டாடிய ராஷ்மிகாவிற்கு ரசிகர்களும் பிரபலங்களும் வாழ்த்துக்கள் தெரிவித்து வந்தனர். அப்போ ரசிகர் ஒருவர் ரஷ்மிகாவின் பிறந்த நாளிற்காக கோவிலுக்கு அபிஷேகம் பண்ணி வழிப்பட்டு பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார். இதற்கு பதிலளித்துள்ள ராஷ்மிகா இவ்வளவு அன்பு பெருமளவிற்கு நான் என்ன செய்தேன் என திகழ்ப்புடன் கூறியுள்ளார்.