வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By Papiksha Joseph
Last Updated : புதன், 3 பிப்ரவரி 2021 (11:25 IST)

இந்திய சினிமாவின் டாப் நடிகை நீங்களே இப்படி பண்ணா மத்தவங்க கதி...?

இந்தியாவின் கடைசி உலக அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் பிரியங்கா சோப்ரா. அதையடுத்து அவர் விஜய் நடித்த தமிழன் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதன் பின் பாலிவுட்டில் நுழைந்த அவர் பத்தாண்டுகளுக்கு மேலாக முன்னணி நடிகையாக வலம் வந்தார். 
 
இப்போது பாலிவுட் மற்றும் ஹாலிவுட் படங்கள் சீரியல்களில் நடித்து வருகிறார். இதையடுத்து 38 வயதாகும் பிரியங்கா சோப்ரா அவரை விட 10 வயது சிறியவரான பாப் பாடகர் நிக் ஜோன்ஸை மணந்துகொண்டார். இப்போது லண்டனில் வசிக்கும் பிரியங்கா அங்கேயே சில வெப் தொடர்களில் நடித்து வருகிறார். 
 
இதற்கிடையில் திருமணம் ஆன பின்னரும் கவர்ச்சிக்கு குறை வைக்காமல் காட்டி வரும் பிரியங்கா சோப்ரா தற்போது உள்ளாடையுடன் ஹாட் போஸ் கொடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு ரசிகர்களை சுண்டி இழுத்துள்ளார். இதனை கண்டு நெட்டிசன்ஸ், இந்திய சினிமாவின் டாப் நடிகையாக இருக்கும் நீங்களே இப்படி கவர்ச்சி காட்டி மொத்த போரையும் மடக்கிவிட்டால் வாய்ப்புக்காக கவர்ச்சி காட்டும் நடிகைகள் நிலைமை என்ன ஆவது? பாவம்ல என கூறியுள்ளனர்.