திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By Siva
Last Modified: வியாழன், 5 அக்டோபர் 2023 (11:34 IST)

யூடியூப் சேனலை மூட வேண்டும், பைக்கை எரிக்க வேண்டும்: TTF வாசன் மீது நீதிபதி காட்டம்..!

TTF Vasan
ஜாமீன் கோரி TTF வாசன்  உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த நிலையில் இந்த மனு மீதான விசாரணையில் நீதிபதி காட்டமாக கருத்து தெரிவித்துள்ளார்.  

விளம்பரத்திற்காக நடத்தி வரும் உங்கள் யூடியூப் சேனலை மூட வேண்டும் எனவும், டிடிஎப் வாசன் பைக்கை எரித்து விட வேண்டும் என்றும்  டிடிஎஃப் ஜாமீன் மனு மீதான விசாரணையின் போது நீதிபதி காட்டமாக தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 மேலும் TTF வாசன் மூன்று லட்ச ரூபாய் மதிப்புள்ள பாதுகாப்பு உடை காரணமாக உயிர் தப்பி உள்ளார். இவரை பின்தொடரும் பலர் அதிவேகமாக பைக் ஓட்டுவது திருட்டு சம்பவங்களில் ஈடுபடுகின்றனர் என்றும் ஜாமீன் மனுவுக்கு காவல்துறை எதிர்ப்பு தெரிவித்தது.

இந்த நிலையில் டிடிஎஃப் வாசன் தரப்பில் உடல் நலமில்லை என்று கூறப்பட்ட நிலையில் சிறையில் வாசனுக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார். மேலும் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்வதாகவும் நீதிபதி அறிவித்தார்.

Edited by Siva