1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By Sinoj
Last Updated : புதன், 9 நவம்பர் 2022 (23:03 IST)

தன் திருமணம் குறித்து தகவல் கூறிய நடிகர் விஷால்

.

தனது திருமணம் குறித்து நடிகர் விஷால் தகவல் தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் செல்லமே என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆனவர் விஷால். இவர் நடிப்பில், அடுத்தடுத்து வெளியான, திமிரு, சண்டக்கோழி உள்ளிட்ட படங்கள் மிகப்பெரிய வெற்றி பெற்று இவரை ஆக்சன் ஹீரோவாக  உயர்த்தியது.

விஷால் நடிப்பதும், படங்களை தயாரித்து வருகிறார்.  சினிமா தயாரிப்பாளர் சங்க தலைவராகவும் இருந்த விஷால்,தற்போது,  லத்தி  மற்றும்   மார்க் ஆண்டனி படத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில்,  ஐதராபாத்தைச் சேர்ந்த பெண்ணுடன் அவருக்குத் திருமணம் ஆக இருந்த நிலையில் இத்திருமண நிச்சயதார்த்தம்  நின்றது. இது சினிமா உலகினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், விஷால் இப்போது நாடோடிகள் உள்ளிட்ட சில படங்களில் நடித்த நடிகை அபிநயாவை திருமணம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியானது.

இதுகுறித்து,  இரு தரப்பினரும் இன்னும் மறுப்பு கூறவில்லை;  இதற்கிடையே ஐதராபாத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில்  கலந்துகொண்ட விஷால் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, ‘’எனக்கு காதலி இருக்கிறார். விரைவில் அவரை அறிமுகப்படுத்துவேன்  என்றும் தன் திருமணம் குறித்து தெரிவிப்பேன்’’ என்று கூறியுள்ளார்.

Edited by Sinoj