செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sinoj
Last Modified: வியாழன், 8 டிசம்பர் 2022 (23:32 IST)

கத்தாரின் இந்த ‘முத்து' தீவுக்கு உலகம் முழுவதும் இருந்து மக்கள் வருவது ஏன்? கட்டுரை தகவல்

Qatar
கத்தாரை ஒரு குமிழி என்று வைத்துக்கொண்டால், லா பெர்லா தீவு அதனுள் இருக்கும் ‘முத்து’ என்று சொல்லாம்.
 
கத்தாரில் வெளிநாட்டவர்களுக்காக கட்டப்பட்டுள்ள ஆடம்பரமான செயற்கைத் தீவில் வசிக்கும் பிரிட்டிஷ் பிரஜையான சிவோபான் டல்லி இதை இப்படி வர்ணிக்கிறார்.
 
பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட இந்த இடங்களை நீங்கள் பார்த்தால், அவர் சொன்னது உண்மைதான் என்று தெரியும். இங்குள்ள தெருக்கள் வளைகுடா நாட்டு தெருக்கள் போல இல்லாமல், மத்தியதரைக் கடலின் ஐரோப்பிய பகுதிகளைப் போன்ற தோற்றத்தை அளிக்கிறது.
 
நாட்டின் எந்தப்பகுதியையும்விட இங்கு வெளிநாட்டினர் அதிகம் காணப்படுகிறார்கள். பல நாடுகளின் குடிமக்கள், பெரும்பாலும் மேற்கத்திய பாணியில் உடையணிந்து, மாலை நேரங்களில் தெரு கஃபேக்கள் மற்றும் பிஸ்ட்ரோ பாணி உணவகங்களில் அமர்ந்திருப்பதைக் காணலாம்.
 
இங்கே நீங்கள் ஸ்பானிஷ் பாணியில் கட்டப்பட்ட தெருக்கள், கால்வாய்கள் மற்றும் வெனிஸ் போன்ற தோற்றத்தைத் தரும் கட்டிடங்களைக் காண்பீர்கள். வட்ட வடிவில் கட்டப்பட்ட வீடுகள் நீரூற்றுகளால் சூழப்பட்டுள்ளன. அவற்றின் வழியாக குறுகிய சாலைகள் செல்கின்றன. மேலும் பல லட்சம் டாலர் மதிப்புள்ள ஸ்போர்ட்ஸ் கார்களின் வரிசையையும் நீங்கள் காண்பீர்கள்.
 
இங்கு மக்கள் ஆடம்பர வில்லாக்கள் அல்லது அடுக்குமாடி குடியிருப்புகளில் வாழ்கின்றனர். 20 மாடிகள் கொண்ட இந்த அடுக்குமாடி குடியிருப்புகள் நீச்சல் குளம், உடற்பயிற்சி கூடம் மற்றும் தனியார் கடற்கரை ஆகியவற்றைக் கொண்டுள்ளன. தோஹாவின் சுற்றுவட்டராத்தில் இதுபோன்ற ஆடம்பரமான இடம் வேறு ஏதும் இல்லை.
 
லெபனான் உணவகத்திற்குள் நுழைந்த சில நிமிடங்களில் செளதி பெண்கள் குழு தங்கள் தலையிலிருந்து ஹிஜாப்களை கழற்றுகிறது. மெரினாவைக் கடந்து செல்லும் பெண்கள், கழுத்து திறந்திருக்கும் ஆடைகள் அணிந்திருப்பதைக் காணமுடிகிறது. அவர்கள் குட்டைப் பாவாடை அணிந்து காணப்படுகின்றனர்.
 
மதுபானம் பரிமாறப்படும் ஹோட்டல்கள் மற்றும் உணவகங்கள் ஏராளமாக உள்ளன.
 
லா பெர்லாவின் அழகான உலகம்
லா பெர்லா யுனைடெட் டெவலப்மென்ட் என்பது யுனைடெட் டெவலப்மென்ட் நிறுவனத்தின் முன்னோடித் திட்டமாகும். இது கத்தாரின் முன்னணி கட்டுமான நிறுவனம். இது ஒரு செயற்கை தீவு. இது மக்களால் உருவாக்கப்பட்டது. நாற்பது லட்சம் சதுர மீட்டர் கடல் இதற்காக பயன்படுத்தப்பட்டுள்ளது.
 
கத்தாருக்கு வெளியே உள்ளவர்களும் சொத்துக்களை வாங்கக்கூடிய முதல் நகர்ப்புற திட்டம் இதுவாகும். இங்கு 25 ஆயிரம் குடியிருப்புகள் உள்ளன. தற்போது இங்கு 33 ஆயிரம் பேர் வசிக்கின்றனர்.
 
இங்கு ஒரு ஸ்டுடியோ வீட்டின் விலை 3 லட்சம் டாலர்கள். ஐந்து படுக்கையறைகள் கொண்ட கடல் நோக்கிய வில்லா 1 கோடியே 20 லட்சம் டாலர்களுக்கு கிடைக்கிறது.
 
இந்தப்பகுதி வானத்தில் இருந்து பார்க்கும் போது முத்து போல் காட்சியளிக்கிறது. இங்கு பல உணவகங்கள் மற்றும் சொகுசு ஹோட்டல்கள், வணிக வளாகங்கள், பார்கள், திரையரங்குகள் மற்றும் ஆடம்பரமான இடங்கள் உள்ளன. இந்த சொகுசு ஹோட்டல் ஒன்றில் உலகக் கோப்பை கால்பந்துப்போட்டியில் பங்கேற்கும் அமெரிக்க அணி தங்கியுள்ளது.
 
சிவோபான் மற்றும் இயான் டல்லி ஆகிய இருவரும் கத்தாரில் ஏழு வருடங்களாக வாழ்ந்து வரும் பிரிட்டனைச் சேர்ந்த தம்பதி. இவர்கள் ஆறரை ஆண்டுகளாக லா பெர்லாவில் உள்ளனர். மனைவி பிரிட்டிஷ் மற்றும் கணவர் ஸ்காட்டிஷ். இருவரும் சுகாதாரத் துறையில் பணிபுரிகின்றனர்.
 
விவா பஹ்ரியாவில் உள்ள தங்கள் கட்டிடத்தை அவர்கள் என்னிடம் காட்டினார்கள். இது கடற்கரையில் கட்டப்பட்ட 30 உயரமான குடியிருப்பு கோபுரங்களின் குழு ஆகும். அவை கடற்கரையில் அரை வட்ட வடிவத்தில் பரவியுள்ளன.
 
"நாங்கள் முதலில் வந்தபோது, இங்கு எந்த வசதியும் இருக்கவில்லை. ஆனால் குறுகிய காலத்தில் இங்கு உணவகங்கள், கஃபேக்கள் மற்றும் வணிகங்கள் வளர்ந்தன. இங்கு நடந்து செல்வது ஒரு இனிமையான அனுபவம். இங்கு காரை அவ்வளவாக ஓட்டவேண்டிய அவசியம் இல்லாமல் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது,” என்று சிவோபான் பிபிசியிடம் தெரிவித்தார்.
 
தோஹா ஒரு நவீன நகரம். இது பல சாலைகளால் இணைக்கப்பட்டுள்ளது. ஒரு சில பாதைகள், சந்திப்புகள் மற்றும் வணிக மையங்களைத்தவிர, இந்த சாலைகளின் அமைப்பு பாதசாரிகளுக்கு ஏற்றதாக இல்லை. இதனால் இங்கு நிழல் மற்றும் வாகனங்களை நிறுத்தும் இடம் கிடைப்பது சிரமமாக உள்ளது.
 
வருடத்தின் பெரும்பகுதியும் அதிக வெப்பமாக இருப்பதால் நடப்பது கடினமாக உள்ளது. மத்திய தரைக்கடல் நகரங்களால் போல அமைக்கப்பட்டுள்ள லா பெர்லா, ஒரு சோலை போல் காட்சியளிக்கிறது.
 
"நாங்கள் இங்கே மூன்று வருடங்கள்தான் இருப்போம் என்று நினைத்தோம். ஆனால் இப்போது ஏழு ஆண்டுகளாக இங்கே இருக்கிறோம். நாங்கள் இங்கே மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறோம். மிகவும் பாதுகாப்பாகவும் உணர்கிறோம்," என்று சிவோபான் கூறுகிறார்.
 
கத்தார் பொதுவாக மிகவும் பாதுகாப்பான இடம். மேற்கத்திய நாட்டு மக்களின் சில நடத்தைகள், அவர்கள் உடை அணியும் விதம் போன்றவை கத்தார் பாரம்பரியத்தை விரும்பும் குடிமக்களுக்கு சில சிக்கல்களை ஏற்படுத்துகின்றன என்று கத்தார் குடிமக்கள் கூறுகின்றனர்.
 
 
தொடக்கத்தில் புலம்பெயர்ந்த சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே லா பெர்லாவில் வசித்து வந்தனர். இவர்களில் பலர் மேற்கத்திய நாடுகளைச் சேர்ந்தவர்கள். கத்தாரில் உள்ள வசதிகள் காரணமாக இங்கே வந்தவர்கள்.
 
ஆனால் இப்போது கத்தார் மக்கள் இங்கு அதிகம் வருகின்றனர். அரச குடும்பத்திற்கு சொந்தமான பல சொத்துக்கள் இங்கு உள்ளன.
 
வெனிஸ் போன்ற தெருக்கள் மற்றும் சிறிய தனியார் தீவுகள்
இங்கே வெனிஸ் போல் தோற்றமளிக்கும் ஒரு பகுதி உள்ளது. அதன் பெயர் Quenet Quartier. இங்கு வசிக்கும் வெனிசுலாவைச் சேர்ந்த குஸ்தாவோ ஜராமிலோ, "இது வெனிஸ் போலவே உள்ளது. ஆனால் அங்கு இருக்கும் சிறிய படகுகள் மட்டும் இங்கு இல்லை,” என்றார்.
 
குஸ்தாவோ ஒரு பொறியாளர். அவர் லா பெர்லாவில் வசிக்கிறார். குஸ்தாவோவும் அவரது பார்ட்னர் சப்ரினா மசியோவிச்சோவும் ஒரு உயரமான குடியிருப்பு கோபுரத்தில் வசிக்கின்றனர். சொந்த நீச்சல் குளமும், தனியார் கடற்கரையும் கொண்ட குடியிருப்பு அது.
 
இருவரும் என்னை காரில் உட்கார வைத்து லா பெர்லா முழுவதையும் சுற்றிக்காட்டி இங்கு வசிப்பதில் உள்ள ஆனந்தம் பற்றிச்சொன்னார்கள்.
 
"வெனிசுவெலாவில் உள்ள பிரச்னைகளை பார்க்கும்போது வேறு எந்த இடமும் நல்லதுதான்," என்று மசியோவிச்சோ கூறுகிறார். "ஆனால் தோஹா மற்றும் லா பெர்லாவில் வாழ்வது ஒரு தனிப்பட்ட அனுபவம்,” என்கிறார் அவர்.
 
அயோலா டானா வழியாகச் செல்லும் போது, "இங்கே வீடியோ எடுக்கும்போது கவனமாக இருங்கள். அது தடைசெய்யப்பட்டுள்ளது" என்று ஜாராமிலோ கூறுகிறார். வாடிக்கையாளர்கள் சிறிய தனியார் தீவுகளை வாங்குவது, இங்குள்ள புதிய திட்டங்களில் ஒன்றாகும். அவர்கள் இங்கு தங்களுடைய சொந்த மாளிகைகளை கட்டிக்கொள்ளலாம்.
 
ஜராமில்லோ இங்கு எரிசக்தி துறையில் பணிபுரிகிறார். அடுக்குமாடி குடியிருப்பில் இருக்கும் வசதிகளுக்கு அவர்கள் பணம் செலுத்துகிறார்கள். போக்குவரத்து மற்றும் தொலைபேசி கட்டணம் செலுத்த வேண்டும். அவரது சம்பளத்தில் 25 சதவிகிதம் மட்டுமே செலவாகிறது. மீதமுள்ள சேமிப்பிற்கு வரி கிடையாது.
 
இங்கு வாழ்வதால் ஏற்படும் நன்மைகளை அவர் பட்டியலிடுகிறார். அந்த நேரத்தில் ஒரு பெரிய சதுர கட்டிடம் தென்படுகிறது.
 
"இது ஒரு வகையான சூப்பர் கண்டிஷனிங் ஆலை. ஐஸ் தண்ணீர் இங்கே பதப்படுத்தப்பட்டு பின்னர் குழாய்கள் மூலம் லா பெர்லா முழுவதற்கும், அதன் ஒவ்வொரு கட்டிடத்திற்கும் அனுப்பப்படுகிறது." என்று ஜாரமிலோ விளக்குகிறார்,
 
அயோலா டானா மற்றும் வெனிஷியன் க்வாட்டர் தவிர, இந்தத்தீவில் உயரமான அலுவலக கட்டிடங்கள், விளையாட்டு மரினாக்கள், குடியிருப்பு கோபுரங்கள் மற்றும் ஒற்றை குடும்ப வில்லாக்கள் உள்ளன.
 
இவற்றைப் பார்த்த சிவோபான், "கத்தார் ஒரு குமிழி என்றால், லா பெர்லா அதனுள் இருக்கும் ‘முத்து’ என்கிறார்.
 
கோவிட் காரணமாக உலகம் எதிர்கொள்ளும் பிரச்னைகள் மற்றும் யுக்ரேன் போர் காரணமான பிரச்னைகள் பற்றி நாங்கள் பேசினோம். இங்கே வாழ்க்கை மிகவும் வித்தியாசமானது என்று அவர்கள் கூறுகிறார்கள்.
 
உதாரணமாக, லா பெர்ல்லா தெருக்களில், குறைந்த ஆடைகளில் மேற்கத்திய நாடுகளைச் சேர்ந்த பெண்களைப் பார்ப்பீர்கள். அவர்கள் கடற்கரையில் பிகினியும் அணிந்திருப்பார்கள். இங்கே யாரும் அவர்களை கவனிப்பதில்லை.
 
பத்திரிகையாளர்கள் மற்றும் உள்ளூர் மக்களின் உரையாடலில், கத்தாரில் இருக்கும் ’முத்து’ பற்றி மீண்டும் மீண்டும் குறிப்பிடப்படுகிறது.
 
அயோலா டானா என்பது லா பெர்லாவின் புதிய திட்டமாகும். இது தற்போது தடை செய்யப்பட்ட பகுதியாகும்.
 
கால்பந்து உலகக் கோப்பை: புலம்பெயர் தொழிலாளர்களின் மரணங்களை குறைத்துக் காட்டுகிறதா கத்தார்?
 
இந்த பகுதிகளின் பளபளப்புக்கு மத்தியில், லேபர் சிட்டியில் வரவேற்பு முகாம்கள் பற்றியும் பேசப்படுகிறது, அங்கு தென்கிழக்கு ஆசியா, ஆப்பிரிக்கா, கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் இருந்துவரும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்காக தங்கும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அவர்கள் தோஹாவின் புறநகரில் வசிக்கின்றனர். லா பெர்லா போன்ற பகுதிகளுக்குள் அவர்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.
 
கத்தாரின் ஆடம்பரம் பற்றிய கேள்வி வராமல் இருப்பதற்காக அவர்கள் தனியாக வைக்கப்படுவதாக பலர் கூறுகிறார்கள். ஆனால் கத்தார் இதை மறுத்துள்ளது. அந்த மக்களின் பாதுகாப்பிற்காக இது செய்யப்படுகிறது என்று கத்தார் தெரிவிக்கிறது.
 
"தொழில் ரீதியாகச்சொன்னால் கத்தார் மக்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது" என்று ஜாரமிலோ கூறுகிறார்.
 
"நாங்கள் அனைவரையும் சந்திக்கிறோம். ஆனால் இங்குள்ள சூழல் லத்தீன் மற்றும் ஸ்பானிஷ் போல இருக்கிறது. நாங்கள் கத்தார் குடிமக்கள் அல்லது உள்ளூர் அரபு மக்களுடன் அதிகம் கலந்து பழகுவதில்லை,” என்று அவர் தெரிவித்தார்.
 
 
"இங்கே தொடர்ந்து நடக்கும் டிரில்லிங் மிகவும் மோசமான விஷயம். எல்லா இடங்களிலும் கட்டுமானம் நடக்கிறது. முன்னால் தெரியும் கட்டிடம் கிட்டத்தட்ட முழுமையடைந்திருப்பதை நீங்கள் காண்கிறீர்கள். இது செப்டம்பரில் கட்ட ஆரம்பிக்கப்பட்டது,” என்று சிவோபான் கூறுகிறார்.
 
இங்கு மருத்துவமனை மற்றும் பள்ளிக்கூடங்கள் குறைவாக இருப்பது குறித்து ஜாராமிலோ மற்றும் மசியோவிச்சோ புகார் சொன்னார்கள். இது மிகவும் கடினமான விஷயம். ஏனெனில் தீவில் ஒரே ஒரு வழி மட்டுமே உள்ளது. அதில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
 
“ஆனால் இப்போது இங்கு ஒரு பெரிய மருத்துவமனை கட்டப்படுகிறது. இதன் காரணமாக நிலைமை மேம்படும் என்று நம்புகிறோம்,” என்று அவர்கள் குறிப்பிட்டனர்.