ஹிந்தி நடிகை நந்தா காலமானார்

செவ்வாய், 25 மார்ச் 2014 (19:31 IST)
பழம்பெரும் ஹிந்தி நடிகை நந்தா மாரடைப்பால் இன்று காலமானார், அவருக்கு வயது 75.

இன்று காலை மும்பையில் உள்ள தனது இல்லத்தில் அவர் காலமானார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். 1950களில் குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் தோன்றிய அவர், பின் பல திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார்.
 
அவர் நடித்த திரைப்படங்களில் ‘ஜப் ஜப் பூல் கிலே’, ‘தீன் தேவியான்’ மற்றும் ‘த டிரேன்’ ஆகியவை மிகவும் பிரபலமானவை. 1982ஆம் ஆண்டில் அவர் திரைப்படங்களில் நடிப்பதிலிருந்து ஓய்வு பெற்றார்.
எந்த உடல் நலக்குறைவும் இல்லாது இருந்த நந்தாவின் மரணம் தங்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளதாக அவரது

உறவினர் ஒருவர் செய்தி நிறுவனம் ஒன்றிடம் தெரிவித்துள்ளார்.
ஹிந்தி முன்னணி நடிகர்களான அஷோக் குமார், கிஷோர் குமார், ராஜேஷ் கன்னா போன்றவர்களுடன் இணைந்து இவர் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக நடிகர் சஷி குமாருடன் இணைந்து இவர் 8 திரைப்படங்களில் நடித்துள்ளார்.

‘அஹிஸ்டா அஹிஸ்டா’, மஸ்தூர்’ மற்றும் பிரேம் ரோக் போன்ற திரைப்படங்களில் இவர் துணை நடிகையாகவும் நடித்துள்ளார்.

எல்லாம் காட்டு

பாட்டிலுக்கு 10 ரூபா வாங்க மாட்டோம்!.. ஆனா அரசு இதை செய்யுமா?!.. டாஸ்மாக் தலைவர் கேள்வி!..

சட்டசபை லைவ்!.. நாலைஞ்சி பாலையா படம் பார்த்த மாதிரி இருந்தது!.. இயக்குனர் நக்கல்!...

ஆபிசில் கேக் கட்டிங் ரத்து!.. ஆனா திரிஷா கூட எப்படி?!. முதல்வரை விமர்சிக்கும் திமுக!..

உங்களுடன் ஸ்டாலின் திட்ட மனுக்கள் ஆற்றில் மிதப்பு: சிவகங்கையில் பெரும் பரபரப்பு!

நாங்கள் ஆதரவு தெரிவிக்கவில்லை என்றால் மே 10 ஆம் தேதி பதவியேற்பு விழா நடந்திருக்காது: பெ சண்முகம்

Show comments