1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 13 ஜூலை 2021 (13:00 IST)

இரு வேறு டோஸ் தடுப்பூசி போடுவது ஆபத்தானது: WHO

இரு வேறு தயாரிப்பு கொரோனா தடுப்பூசி மருந்துகளை போடுவது ஆபத்தானது என்று உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி செளமியா சுவாமிநாதன் தகவல். 

 
கொரோனா வைரஸை தடுக்கும் நோக்குடன் உலக அளவில் பல்வேறு நாடுகளில் உலக சுகாதார அமைப்பின் அங்கீகாரம் மற்றும் உள்நாட்டில் மருத்துவ அமைப்பால் ஒப்புதல் தரப்பட்ட தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன.
 
இந்த நிலையில், சில இடங்களில் இரு வகை தடுப்பூசி மருந்துகளை போட்டுக் கொண்டால் கொரோனா எதிர்ப்புத்திறன் பெருகுவதாக தகவல் வெளியானது. சமீபத்தில் தாய்லாந்து அரசு கூட தமது குடிமக்களுக்கு இரு வேறு தயாரிப்பு கொரோனா தடுப்பூசி போட ஏதுவாக அதன் தடுப்பூசி கொள்கையில் மாற்றம் செய்துள்ளது.
 
இந்த விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள செளமியா சுவாமிநாதன், "இப்படி போடப்படும் தடுப்பூசிகளால் ஏற்படும் தாக்கம் பற்றி மிகவும் சொற்ப அளவிலேயே தரவு கிடைத்துள்ளது," என்றார். இது மிகவும் ஆபத்தான போக்கு.
 
இரு வேறு வகை கொரோனா தடுப்பூசியை போடுவது நிச்சயம் கவலை தரக்கூடிய விஷமே. இதை தொடர்படுத்த நம்மிடம் வலுவான அறிவியல்பூர்வ தரவு கிடையாது என்று தெரிவித்தார். கொரோனா தடுப்பூசியில் எந்த வகையை எப்படி போடுவது, எதை போடுவது என்பதையும் தீர்மானிப்பது சாதாரண மக்களாக இருந்தால் அது நிச்சயம் குழப்பமான சூழ்நிலைக்கே வழிவகுக்கும் என்று செளமியா சுவாமிநாதன் தெரிவித்தார்.