Daily Horoscope
✕

விமானி என ஏமாற்றி 25 ஆண்டுகள் விமானம் ஓட்டிய பொறியாளர்

Updated: சனி, 2 மார்ச் 2019 (18:33 IST)
தென்னாப்பிரிக்க அரசுக்குச் சொந்தமான சௌத் ஆஃப்ரிக்கன் ஏர்லைன்ஸ் விமான சேவை நிறுவனத்தில், விமானிகளுக்கான உரிமம் இல்லாமல் 25 ஆண்டுகள் விமானங்களை இயக்கி வந்த விமானி பதவி விலகியுள்ளார்.
 
வில்லியம் சாண்ட்லர் எனும் அந்த நபர் செய்த முறைகேட்டை அவரது ஆவணங்கள் சரிபார்ப்பின் போது கண்டுபிடிக்கப்பட்ட பின்னர், அவரிடம் இருந்து இழப்பீடாக பெரும் தொகையை கோரியுள்ள விமான சேவை நிறுவனம், அவர் மீது குற்றவியல் நடவடிக்கைகள் எடுக்கப்போவதாக அறிவித்துள்ளது.
 
தென்னாப்பிரிக்காவில் இருந்து ஜெர்மனி செல்லும் ஒரு பயணத்தின்போது, சுவிட்சர்லாந்தின் ஆல்ப்ஸ் மலைத்தொடருக்கு மேல் விமானம் பறந்துகொண்டிருந்த நேரத்தில் ஏற்பட்ட அதிர்வுகளின்போது, அவர் விமானத்தை வினோதமாக இயக்கிய விதம் அவர் மீது சந்தேகத்தைத் தூண்டியுள்ளது. 
 
விமானி ஆவதற்கு முன்பு வில்லியம் விமானப் பொறியாளராக பணியாற்றியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

எல்லாம் காட்டு

அலார்ட்டா இருக்கணும்!.. தவெகவை பகைத்துக்கொள்ளாத எ.வ.வேலு!.. அப்செட்டில் திமுக தலைமை!..

கண்டபடி திட்டினேன்!.. விஜய் ஒரு கோடி கொடுத்தார்!. கருணாஸ் பேட்டி!..

டாஸ்மாக் பார்களில் உணவுக்கூடம்(Resto Bar).. அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு...

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்.. ஒரு செங்கலை கூட வைக்க விடமாட்டோம்: ஜெயகுமார்

விஜய் லண்டனுக்கு ஜாலி டூர் போனாரா?!... எடப்பாடி பழனிச்சாமி நக்கல்...

அடுத்த கட்டுரையில்
Show comments