Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெட்ரோல் விநியோகிக்கும் பிரிட்டன் ராணுவம்

Written By Sugapriya Prakash
Updated: சனி, 2 அக்டோபர் 2021 (13:50 IST)
பிரிட்டனில் ஓட்டுநர் பற்றாக்குறை ஏற்பட்டதால் பெட்ரோல் பங்குகளில் போதிய அளவுக்கு எரிபொருள் இல்லை. 
 
எனவே மக்கள் எரிபொருள் நிரப்ப நீண்ட வரிசையில் காத்திருந்தனர். இப்பிரச்சனையை சரி செய்ய, பிரிட்டன் அரசு ராணுவத்தை களமிறக்கியுள்ளது.
 
திங்கட்கிழமை முதல் பிரிட்டன் ராணுவத்தினர் கராஜ்களுக்கு எரிபொருளை விநியோகிப்பர் என அரசு தரப்பு கூறியுள்ளது. எரிபொருள் விநியோகப் பிரச்சனையை எதிர்கொள்ளும் பணியில் சுமார் 200 ராணுவத்தினர் (அதில் 100 பேர் ஓட்டுநர்கள்) ஈடுபடுத்தப்படுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
 
வெளிநாட்டிலிருந்து 300 எரிபொருள் டேங்கர் லாரி ஓட்டுநர்களை வரவழைத்து, அவர்கள் வரும் மார்ச் மாதம் வரை பணியாற்ற வழிவகை செய்யப்பட்டிருப்பதாகவும் அமைச்சர்கள் கூறியுள்ளனர்.
 
பிரிட்டனில் 1,100 பெட்ரோல் நிரப்பும் பங்குகளிடம், பெட்ரோல் விநியோகஸ்தர்கள் சங்கம் நடத்திய கருத்துக் கணிப்பில் 26 சதவீத பங்குகளில் பெட்ரோல் அல்லது டீசல் கையிருப்பு இல்லை என கூறப்பட்டுள்ளது.

எல்லாம் காட்டு

நேபாளம் பேரிடர்.. உயிரை காப்பாற்றி கொள்ள சீனாவில் தஞ்சமடைந்த 400 இந்தியர்கள்...

தலித் சமுதாயத்தை பரிதாபமாக பார்ப்பது ஏன்?!.. சட்டசபையில் பொங்கிய வன்னியரசு!...

10 டன் பேரிடர் நிவாரணப் பொருட்கள் அனுப்பிய இந்தியா.. நன்றி தெரிவித்த நேபாள அரசு...

மனுஸ்மிருதி குறித்து தவறாக பேசுவதா? ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும்... சுவாமி அவிமுக்தேஸ்வரானந்த சரஸ்வதி

ChatGPT என தெரியாமல் வெளிநாட்டு பெண் என நினைத்து க்யூட்டாக பேசும் பாட்டி.. வைரல் வீடியோ..

அடுத்த கட்டுரையில்
Show comments