வியாழன், 9 ஜனவரி 2025
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. மாதாந்த ஜாதகம்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 1 அக்டோபர் 2022 (11:41 IST)

அக்டோபர் 2022 மாத ஜோதிடப் பலன்கள்: ரிஷபம்

ரிஷபம் (கார்த்திகை 2, 3, 4 பாதம்,  ரோகிணி, மிருக சிரீஷம் 1, 2, பாதம்)


கிரகநிலை:
ராசியில் செவ்வாய் - சுக ஸ்தானத்தில் புதன் - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சூர்யன், சுக்கிரன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் கேது - பாக்கிய ஸ்தானத்தில் சனி (வ) - லாப ஸ்தானத்தில் குரு(வ) - விரைய ஸ்தானத்தில் ராகு என கிரகநிலை இருக்கிறது.

கிரகமாற்றங்கள்:
இம்மாதம் 03ம் தேதி புதன் பகவான் பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
இம்மாதம் 9ம் தேதி செவ்வாய் பகவான் தனவாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
இம்மாதம் 18ம் தேதி சூர்யன் பகவான் ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
இம்மாதம் 20ம் தேதி சுக்கிர பகவான் ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
இம்மாதம் 23ம் தேதி புதன் பகவான் ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:
வெளுத்தது எல்லாம் பால் என்று நினைக்கும் வெள்ளை உள்ளம் கொண்ட ரிஷப ராசியினரே, இந்த மாதம் காரிய தடை ஏற்படலாம்.  மனதில் ஏதாவது குழப்பம் ஏற்பட்டு நீங்கும். சாமர்த்தியமான பேச்சு கை கொடுக்கும். பணவரத்து திருப்தியாக இருக்கும். நீண்ட நாட்களாக இழுத்து வந்த வீண் பிரச்சனைகள் நீங்கும். மரியாதை அந்தஸ்து உயரும். வெளிநாட்டு பயணங்கள் கைகூடும்.

குடும்பத்தில் மகிழ்ச்சி காணப்படும். உறவினர், நண்பர்கள் மத்தியில் மதிப்பு உயரும். வீட்டிற்கு தேவையான  பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். கணவன், மனைவிக்கிடையே  நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகள் மூலம் சந்தோஷம் உண்டாகும். 

தொழில் வியாபார சிக்கல்கள் நீங்கி நன்கு நடைபெறும். கூடுதல் லாபம் கிடைக்க பெறுவீர்கள். தொழில் வியாபாரம் விரிவாக்கம் செய்ய முயற்சி மேற்கொள்வீர்கள்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். சிலருக்கு புதிய பதவி கூடுதல் பொறுப்புகள் கிடைக்கலாம். கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். அலுவலகத்தில் அடுத்தவர்களால் திடீர் பிரச்சனை தலை தூக்கலாம். உங்களது கருத்துக்கு மாற்று கருத்து உண்டாகலாம்.

பெண்களுக்கு திறமையான பேச்சின் மூலம் சாதகமான பலன் கிடைக்கும். காரிய தடைகள் நீங்கும். மனதில் இருந்த சோர்வு நீங்கி உற்சாகம்  உண்டாகும். எதிர்பார்த்த தகவல் சாதகமாக வரும்.

கலைத்துறையினருக்கு கடன் விவகாரங்கள் கட்டுக்குள் இருக்கும். புதிய ஆர்டர்களுக்கான  முயற்சிகள் சாதகமான பலன் தரும். வீண் அலைச்சலை சந்திக்க வேண்டி இருக்கும்.

அரசியலில் உள்ளவர்களுக்கு கோபமாக பேசுவதை தவிர்ப்பது நல்லது.  மேல்மட்டத்தில் உள்ளவர்களுடன் வாக்குவாதங்கள் ஏற்படலாம். கவனம் தேவை.

மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்ற மடைய முழு முயற்சியுடன் படிப்பீர்கள். சக மாணவர்கள் மத்தியில் மதிப்பு உயரும்.

கார்த்திகை:
இந்த மாதம் குடும்பத்தில் சந்தோஷம் உண்டாகும். பிரிந்து சென்ற குடும்ப உறுப்பினர் மீண்டும் வந்து சேரலாம். கணவன், மனைவிக்கிடையே இருந்த மனஸ்தாபங்கள் நீங்கும். பிள்ளைகள் கல்வி பற்றிய  சிந்தனை அதிகரிக்கும். உறவினர் மத்தியில் மரியாதை கூடும்.

ரோகினி:
இந்த மாதம் எதிர்பாராத சந்திப்புகள் உண்டாகும். திடீர் செலவு உண்டாகும். முக்கிய பொறுப்புகள் கிடைக்கக்கூடும். தேவையான  பொருள்களை வாங்குவீர்கள். நீண்ட நாட்களாக செய்ய நினைத்த ஒரு காரியத்தை செய்து முடிப்பீர்கள். மதிப்பும், மரியாதையும் கூடும். குடும்பத்தினருடன் வீண் மனஸ்தாபம் ஏற்பட்டு நீங்கும்.

மிருகசீர்ஷம்:
இந்த மாதம் நண்பர்களிடையே சுமூக உறவு இருக்க விட்டு கொடுத்து செல்வது நல்லது. வாழ்வில் முன்னேற அக்கறை காட்டுவீர்கள். மனத்துணிவு அதிகரிக்கும். பணவரத்து எதிர்பார்த்தபடி  திருப்திகரமாக இருக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். 

பரிகாரம்:  வெள்ளிக்கிழமையில் நவக்கிரகத்தில் சுக்கிரனுக்கு மொச்சை தீபம் ஏற்றி அர்ச்சனை செய்ய எதிர்பார்த்த பணவரத்து இருக்கும். மனமகிழ்ச்சி ஏற்படும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வெள்ளி
சந்திராஷ்டம தினங்கள்: 2, 3, 30, 31
அதிர்ஷ்ட தினங்கள்: 13, 14, 15