வியாழன், 23 ஜனவரி 2025
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. மாதாந்த ஜாதகம்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 1 அக்டோபர் 2022 (11:39 IST)

அக்டோபர் 2022 மாத ஜோதிடப் பலன்கள்: மேஷம்

அக்டோபர் 2022 மாத ஜோதிடப் பலன்கள்: மேஷம்


கிரகநிலை:
ராசியில் ராகு - தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய் - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் புதன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் சூர்யன், சுக்கிரன் - சப்தம ஸ்தானத்தில் கேது - தொழில் ஸ்தானத்தில் சனி (வ) - விரைய ஸ்தானத்தில் குரு(வ) என கிரகநிலை இருக்கிறது.

கிரகமாற்றங்கள்:
இம்மாதம் 03ம் தேதி புதன் பகவான் ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
இம்மாதம் 9ம் தேதி செவ்வாய் பகவான் தைரிய வீர்ய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
இம்மாதம் 18ம் தேதி சூர்யன் பகவான் சப்தம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
இம்மாதம் 20ம் தேதி சுக்கிர பகவான் சப்தம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
இம்மாதம் 23ம் தேதி புதன் பகவான் சப்தம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:
இடுக்கண் வருங்கால் நகுக என்பதற்கேற்ப எத்தனை துன்பங்கள் வந்தாலும் அதனை  மனதுக்குள் மறைத்து வெளியில் மகிழ்ச்சியை காண்பிக்கும் திறனுடைய மேஷ ராசி அன்பர்களே இந்த மாதம் பல வகையிலும் நற்பலன்களை அள்ளித் தரும். தெய்வபக்தி அதிகரிக்கும். பயணங்கள் மகிழ்ச்சி தரும்.  மனதில் சுய நம்பிக்கை அதிகரிக்கும். எதிலும் கவனமாக பேசுவது நல்லது. வீண் பழி உண்டாகலாம்.

குடும்பத்தில் இருப்பவர்களால் ஏதாவது மனம் நோகும்படியான நிலை உருவாகலாம். கணவன், மனைவி ஒருவரை ஒருவர் மனம் விட்டு பேசி எடுக்கும் முடிவுகள் நன்மை தரும். பிள்ளைகளின் கல்வியில் கவனம் தேவை. கெட்டகனவுகள் தோன்றும். நெருக்கடியான நேரத்தில் உறவினர்கள், நண்பர்கள் உங்களை விட்டு விலகி செல்லலாம். மனதில் நிலையான எண்ணம் இருக்காது. பணநெருக்கடி குறையும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

தொழில் வியாபாரத்தில் எதிர்பாராத சிக்கலை சந்திக்க வேண்டி இருக்கலாம். ஆர்டர்கள் மற்றும் பொருட்கள் சப்ளை செய்வதில் கவனம் தேவை. பணவரத்து  தாமதப்படலாம்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதல் பணி சுமையை ஏற்க வேண்டி இருக்கும். முக்கிய பொறுப்பு கிடைக்கலாம். எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கலாம். சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் பணிகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள்.

பெண்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும். பயணங்கள் மூலம் காரிய அனுகூலம் உண்டாகும். எச்சரிக்கையாக பேசுவது நல்லது.

கலைத்துறையினருக்கு மனத்துணிவு அதிகரிக்கும். பணவரத்து எதிர்பார்த்தபடி  திருப்திகரமாக இருக்கும். காரிய வெற்றிக்கு தேவையான உதவிகள் கிடைக்கும்.

அரசியலில் இருப்பவர்களுக்கு இடமாற்றம், பதவி இறக்கம் ஆகியவற்றை சந்திக்க வேண்டி இருக்கும். இருப்பினும் நற்பெயர் கிடைக்கும்.

மாணவர்களுக்கு  கல்விக்காக செலவு உண்டாகும். கல்வியில் வெற்றி பெறு வோம் என்ற நம்பிக்கை அதிகரிக்கும்.

அசுபதி:
இந்த மாதம் எல்லோரையும் வசீகரிக்கும் பேச்சை வளர்த்துக் கொள்வீர்கள். ராசிநாதன் செவ்வாயின் சஞ்சாரத்தால் எல்லா காரியங்களும் அனுகூலமாகும். முக்கிய நபர்களின் சந்திப்பும் அவர்களால் உதவியும் கிடைக்கும். 

பரணி:
இந்த மாதம் உடல் ஆரோக்கியம் பெறும்.  மனதில் தைரியம் கூடும்.  சுய நம்பிக்கை உண்டாகும். எடுத்த காரியங்களை செய்து முடிப்பதில் எதிர் பாராத திருப்பங்கள் ஏற்படும்.

கார்த்திகை:
இந்த மாதம் லாப ஸ்தானத்தில் இருக்கும் கேதுவின் சஞ்சாரத்தால் தொழில் வியாபாரத்தில் முன்னேற வாய்ப்புகள் எதிரில் வந்து தோன்றும். வியாபாரம் தொடர்பான செலவு கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு முக்கிய பொறுப்பு கிடைக்கலாம். செயல்திறன் அதிகரிக்கும்.

பரிகாரம்: செவ்வாய்கிழமைதோறூம் விரதம் இருந்து முருகனை வணங்கி வர காரிய தடைகள் நீங்கும். எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், புதன், வெள்ளி;
சந்திராஷ்டம தினங்கள்: 1, 28, 29
அதிர்ஷ்ட தினங்கள்: 11, 12