செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. மாதாந்த ஜாதகம்
Written By
Last Modified: புதன், 31 ஜூலை 2019 (15:52 IST)

ஆகஸ்ட் மாத ஜோதிடப் பலன்கள்: கும்பம்

ஆகஸ்ட் மாத ஜோதிடப் பலன்கள்: கும்பம் (அவிட்டம் 3, 4 பாதம், சதயம், பூரட்டாதி 1, 2, 3  பாதம்)
 

கிரகநிலை:
பஞ்சம ஸ்தானத்தில் புதன்,  ராஹூ - ரண ருண ரோக ஸ்தானத்தில் சூரியன், சந்திரன், செவ்வாய், சுக்கிரன் - தொழில் ஸ்தானத்தில்  குரு (வ)  - லாப ஸ்தானத்தில் சனி (வ), கேது  என கிரகங்கள் வலம் வருகின்றன.

கிரக மாற்றங்கள்:
இம்மாதம் 3ம் தேதி புதன் பகவான் பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்திலிருந்து ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
இம்மாதம் 7ம் தேதி தொழில் ஸ்தானத்தில் இருக்கும் குரு பகவான் வக்ர நிவர்த்தி அடைகிறார்.
இம்மாதம் 10ம் தேதி செவ்வாய் பகவான் ரண ருண ரோக ஸ்தானத்திலிருந்து சப்தம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
இம்மாதம் 17ம் தேதி சூரியன் பகவான் ரண ருண ரோக ஸ்தானத்திலிருந்து சப்தம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
இம்மாதம் 17ம் தேதி சுக்கிரன் பகவான் ரண ருண ரோக ஸ்தானத்திலிருந்து சப்தம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
இம்மாதம் 21ம் தேதி புதன் பகவான் ரண ருண ரோக ஸ்தானத்திலிருந்து சப்தம ஸ்தானத்திற்கு மாறுகிறார். 

பலன்: 
உறவினர்கள் விசயத்தில் உற்ற துணையாக இருக்கும் கும்ப ராசி அன்பர்களே, இந்த மாதம் எதிர்ப்புகள் விலகும். எல்லா நன்மைகளும் உண்டாகும். பயணம் மூலம் நன்மை கிடைக்கும். செய்யும் காரியங்களால் பெருமை ஏற்படும். காரிய தடைகள் அவ்வப்போது இருந்தாலும் பணவரத்து அதிகரிக்கும். புத்தி சாதூரியம் கூடும்.

தொழில் வியாபாரத்தில் எதிர்பாராத சிக்கலை சந்திக்க வேண்டி இருக்கலாம். ஆர்டர்கள் மற்றும் பொருட்கள் சப்ளை செய்வதில் கவனம் தேவை. பணவரத்து  தாமதப்படலாம்.

குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். உறவினர்கள் மத்தியில் மதிப்பு கூடும். கணவன், மனைவிக் கிடையே நெருக்கம் உண்டாகும். பிள்ளைகளின் செயல்கள் சந்தோஷத்தை தரும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி திருப்தியடைவீர்கள். எண்ணியபடி செயல்களை செய்து காரிய வெற்றி காண்பீர்கள். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். ஆன்மிக பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும்.  விரும்பிய பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். திருமண முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். உடல்நலனைப் பொறுத்தமட்டில் ஜலதோஷ தொந்தரவு ஏற்படலாம். தலையில் நீ கோர்த்துக் கொள்ளாமல் பார்த்துக் கொள்ளவும்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். சிலருக்கு புதிய பதவி கூடுதல் பொறுப்புகள் கிடைக்கலாம். கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். அலுவலகத்தில் அடுத்தவர்களால் திடீர் பிரச்சனை தலை தூக்கலாம். உங்களது கருத்துக்கு மாற்று கருத்து உண்டாகலாம்.

கலைத்துறையினருக்கு கடன் விவகாரங்கள் கட்டுக்குள் இருக்கும். புதிய ஆர்டர்களுக்கான  முயற்சிகள் சாதகமான பலன் தரும். வீண் அலைச்சலை சந்திக்க வேண்டி இருக்கும்.

அரசியல் மற்றும் பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு மேலிடத்தை அனுசரித்து செல்வது நல்லது.  பழைய பாக்கிகளை  வசூல் செய்வதில் வேகம் காட்டுவீர்கள். எடுத்த வேலையை செய்து முடிப்பதற்குள் பல தடங்கல்கள் உண்டாகும்.

பெண்களுக்கு எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. சேமிப்புகள் செய்யும் முன் தகுந்த ஆலோசனை பெறவும்.

மாணவர்களுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கி பாடங்களை படிக்க வேண்டி இருக்கும். பெற்றோர் சொல்படி கேட்டு நடப்பீர்கள்.

அவிட்டம் 3, 4 பாதங்கள்:
இந்த மாதம் உங்களின் முன்கோபத்தைக் குறைத்துக்கொண்டு எதிலும் சிந்தித்துச் செயல்படுவதும், பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பதும் நல்லது. எந்தவொரு காரியத்திலும் அதன் முழுப்பலனை அடையமுடியாமல் தடைகள் உண்டாகும். கொடுக்கல்- வாங்கலிலும் வீண் விரயங்களைச் சந்திப்பீர்கள்.

ஸதயம்:
இந்த மாதம் தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு எதிர்பார்த்த கடனுதவிகள் கிடைக்கும்.  கூட்டாளிகள் மற்றும் நண்பர்களால் ஓரளவுக்கு அனுகூலப்பலனை அடைவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரியிடம் வீணான கருத்து வேறுபாடுகள் ஏற்படக்கூடும் என்பதால் பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது.

பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள்:
இந்த மாதம் உத்தியோக உயர்வுகள், இடமாற்றங்கள் யாவும் தடைகளுக்குப்பின் கிடைக்கும். அரசியல்வாதிகள் மக்களின் தேவையறிந்து செயல்பட்டால் மட்டுமே பதவிகளைக் காப்பாற்றிக்கொள்ள முடியும்.

பரிகாரம்: பகவத்கீதை படித்து ஸ்ரீகிருஷ்ணனை வணங்கி வர எல்லா பிரச்சனைகளும் தீரும். மன மகிழ்ச்சி உண்டாகும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், வியாழன்;
சந்திராஷ்டம தினங்கள்: 22, 23
அதிர்ஷ்ட தினங்கள்: 15, 16, 17