Daily Horoscope
✕

இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் (11-12-2022)!

Written By Sugapriya Prakash
Updated: சனி, 10 டிசம்பர் 2022 (16:53 IST)
இன்று உங்களுடைய ராசியின்படி உங்களுக்கான நாள் எப்படி இருக்கிறது என்று தெரிந்துக்கொள்ளுங்கள்.


மேஷம்:
இன்று முயற்சிகள் பயன்தராமல் போகலாம். சாதாரணமாக செய்யக்கூடிய காரியங்களைக் கூட அதிகமாக முயற்சிகள் எடுத்து செய்ய வேண்டியதிருக்கும். பணவரத்து தாமதமாகும்.
அதிர்ஷ்ட நிறம்: கருநீலம், மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 9

ரிஷபம்:
இன்று குடும்பத்தில் இருப்பவர்களால் வீண் தொல்லைகள்  ஏற்படலாம். தாய் வழி உறவினர்களிடம் வீண் மனஸ்தாபம் உண்டாகலாம். கணவன், மனைவிக்கிடையே  கருத்து வேற்றுமை வரலாம்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 5, 6

மிதுனம்:
இன்று பிள்ளைகள் மேல் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. பெண்களுக்கு வீண் மனக்கவலை உண்டாகலாம். காரியங்களில் தடை தாமதம், வீண் செலவு ஏற்படலாம்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 7

கடகம்:
இன்று புத்தி சாதுரியத்தால் எதையும் சமாளிப்பீர்கள். வீண் அலைச்சல் ஏற்படும். நீங்கள் நினைப்பது படி மற்றவர்கள் நடந்து கொள்ளாததால் டென்ஷன் ஏற்படலாம். யாருக்கும் வாக்கு கொடுக்க வேண்டாம்.
அதிர்ஷ்ட நிறம்: வெண்மை, பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

சிம்மம்:
இன்று தொழில் தொடர்பான பயணங்கள் அதனால் அலைச்சல்  ஏற்படலாம். பணிகளில் இடையூறுகள் ஏற்படலாம். பழைய பாக்கிகள் வசூலில் தாமதமான நிலை காணப்படும். மனம் நிம்மதிக்காக அலையும்.
அதிர்ஷ்ட நிறம்: வெண்மை, நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 6, 9

கன்னி:
இன்று சிரமங்களுக்கிடையே அதிக பயனை அடைவீர்கள். சிலரின் ஆதங்கம் உங்களுக்கு புரியும். உள்ளது உள்ளபடி பேச ஆசைப்படுவீர்கள். வேலை சுமை அதிகரிப்பதுடன் அலைச்சலும் அதனால் சோர்வும் உண்டாகும்.
அதிர்ஷ்ட நிறம்: பழுப்பு, வெளிர் நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 5, 7

துலாம்:
இன்று சொன்ன சொல்லை எப்பாடுபட்டாவது காப்பாற்றுவீர்கள். ஒரு சில பணி காரணமாக வீட்டை விட்டு வெளியில் தங்க நேரிடலாம். பிள்ளைகளின் முன்னேற்றத்தில் கூடுதல் கவனம் செலுத்துவீர்கள். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7

விருச்சிகம்:
இன்று பெண்களுக்கு திடீர் செலவு உண்டாகலாம். காரியங்களில் தடை தாமதம் ஏற்படலாம் கவனம் தேவை. மறைமுக போட்டிகள் இருக்கும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3

தனுசு:
இன்று வெற்றி உங்கள் பக்கம் இருக்கும் நாள். தாய் தந்தையரிடம் நன்மதிப்பை பெறுவீர்கள். பெரியோரின் ஆசி உங்களுக்கு கிட்டும். பணவரவு நல்ல படியாக திருப்தி தரும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 9

மகரம்:
இன்று உங்கள் உழைப்பினை தொடர்ந்து செய்வதன் மூலம் வெற்றியை உங்கள் பக்கம் தக்க வைத்துக் கொள்ளலாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. ஆயுதங்கள் கையாளும் போதும் வாகனங்களை ஓட்டும்போதும் எச்சரிக்கை அவசியம்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை
அதிர்ஷ்ட எண்: 9, 3

கும்பம்:
இன்று வீண் செலவுகள் குறையும். அடுத்தவர்களுக்கு உதவ போய் வீண் பழி ஏற்படலாம் கவனம் தேவை. தொழில் வியாபாரம் தொடர்பான அலைச்சல் அதிகரிக்கும். ஆனால் பணவரத்து திருப்திகரமாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம்
அதிர்ஷ்ட எண்:  4, 6

மீனம்: 
இன்று உறவினர்கள் வருகை இருக்கும். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டாகும். நீண்ட நாளைய நிலுவையில் இருந்த பணம் வந்து சேரும். கணவன் மனைவி ஒருவருக்கொருவர் அனுசரித்து செல்வது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெளிர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 5, 6

எல்லாம் காட்டு

சத்குருவிற்கு உலக அமைதி விருது: மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் வழங்கினார்

ரூ.5,000 வரை உடனடி அபராதம் விதிக்கப்படும்.. சபரிமலை பக்தர்களுக்கு கேரள அரசு எச்சரிக்கை...

இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படும் கோபாஷ்டமி பண்டிகை.. கோபூஜை செய்ய சரியான நேரம் எது?

நாளை திருச்செந்தூரில் சூரசம்ஹாரம்.. 4,100 போலீஸார் குவிப்பு... கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள்...

இன்று தீபாவளி திருநாள்.. லட்சுமி பூஜை செய்யும் நேரம் குறித்த தகவல்...

அடுத்த கட்டுரையில்
Show comments