திங்கள், 23 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. கட்டுரைகள்
Written By Webdunia
Last Updated : திங்கள், 3 செப்டம்பர் 2018 (12:45 IST)

மறுமலர்ச்சியின் துவக்கம்

அரசியல் புரட்சியல்ல உள் மலர்ச்சி!

நாடு காணாத அமைதிப் புரட்சி நாகர்கோவில் மற்றும் புதுச்சேரியில் மௌனமாய் அரங்கேறியது. கேளுங்கள், சத்குருவின் வார்த்தைகளில்...

 
WD
புது‌ச்சேரியின் ஆனந்த அலை சுட்டெரிக்கும் வெயிலிலும் சுகமாய் உயிர்களை மலரச்செய்தது.

எழில்மிகு நாகர்கோவில்...

நாகர்கோவிலில், சுற்றிலும் அழகாய் நிற்கும் மேற்குத் தொடர்ச்சி மலைகளின் அடிவாரத்தில் குளுமையாய் 10,600 பேருக்கு யோகம் சொல்லிக் கொடுக்க வழி வகுத்தது வெள்ளாடிச்சி விளை கண்ணன் குளம் மைதானம்.

இரு வகுப்புகளின் பாணியும் ஒன்றாய் அமைந்திருந்தாலும், பங்கேற்ற மக்களும் வகுப்பை நிகழ்த்திய தன்னார்வத் தொண்டர்களும் தங்கள் ஊருக்கு இன்னும் அழகும் மெருகும் கூட்டியுள்ளனர், தங்கள் அர்ப்பணிப்பால்!

பல சிறப்புகளுடன் வெகு நேர்த்தியாக நடந்தேறியுள்ள இவ்வகுப்புகளைப் பற்றி சத்குரு...

"கடந்த 20 வருடங்களாய் மிக உன்னிப்பாக நாம் பார்த்து வளர்த்த இந்த ஆன்மீக இயக்கம் தற்போது தமிழ்நாட்டில் மிகப்பெரிய ஆன்மீக இயக்கமாக வளர்ந்துள்ளது. சில மாதங்களுக்கு முன்னர் 10,000 பேர் தீட்சை பெறுவதைப் பற்றி கற்பனைகூட செய்ய இயலாது.

இன்று பத்தாயிரம் வெகு சாதாரணம் என்றாகிவிட்டது. இது எண்ணிக்கையை பற்றியது அல்ல, எங்கோ மலை மேல் இருந்த ஆன்மீகம் இன்று நம் வீடுகளுக்கு வந்துள்ளது, இது ஒரு மகத்தான செயல்.

{C}
 
WD
{C}வகுப்பு செய்த இத்தனை மக்கள் ஈஷா யோகா மையத்திற்கு வந்தால், அவர்களுக்குத் தேவையான அடிப்படை விஷயங்களை நாம் கவனித்துக் கொள்வதே பெருத்த சவாலாக இருக்கும். இது மேலும் மேலும் பெருகிக் கொண்டேதான் செல்லப் போகிறது.

நாம் கட்டமைப்பு வசதிகளை பெருக்குவதை எப்படி துரிதப்படுத்தினாலும் அது இங்கு நடைபெறும் செயல்களுக்கு ஈடுகொடுக்கவும் இல்லை, போதவுமில்லை.

இத்தனை பேர் வகுப்பில் ஒன்றாக இருந்தாலும் நாம் ‘கண்களை மூடுங்கள்’ என்று ஒரு வார்த்தை கூறினால், அத்தனை பேரும் ஒரே குறிப்பில் செய்வது, இதுவரை நடைபெற்றிராத ஒரு விஷயம். நாம் கடந்த சில வருடங்களாய் செய்த செயல்களால், மக்கள் இது மிகத்தீவிரமான செயல்பாடு என்பதனை அறிந்துள்ளனர்.

இன்று இந்த அளவிற்கு மக்களுடைய ஈடுபாடும் உறுதியும் வளர்ந்துள்ளது. நம் மனதில், அடுத்த 2 வருடங்களில் தென்னிந்தியா முழுவதும் இதனால் தொடப்பட வேண்டும் என்றிருக்கிறது.

இது ஈஷா பற்றியது அல்ல. இது மொத்த மனிதகுலத்தையும் பற்றியது. நாம் எதனை உருவாக்கிக் கொண்டிருக்கிறோமோ அதற்கு இந்த மனிதகுலமே தயாராய் உள்ளது. நாம் உருவாக்கி வருபவை இவ்வுலகிற்கு பல்வேறு வகையில் அற்புதமான சாத்தியங்களாய் விளங்கப் போகின்றன."