தைராய்டு பிரச்சனைகளை சீராக்க உதவும் ஆசனங்கள்!!
உணவுப் பழக்கங்களும் மாறிவரும் வாழ்க்கைமுறையும் தைராய்டு வரக் காரணமாகின்றன. இது, பெண்களை மட்டுமே பாதிக்கும் என்பது தவறு. இருபாலாரையும் எந்தவித பேதமுமின்றி பாதிக்கும். பெண்களைக் கொஞ்சம் அதிகமாகவே பாதிக்கிறது.
தைராய்டு என்பது ஒரு நோய் அல்ல. அயோடின் குறைபாட்டால் கழுத்துப் பகுதியில் உள்ள எண்டோகிரைன் சுரப்பிகள் பாதிக்கப்பட்டு அழற்சியை ஏற்படுவதையே 'தைராய்டு' என்கிறோம். இது ஹைப்பர் தைராய்டிசம், ஹைப்போ தைராய்டிசம் என இரண்டு வகையாகப் பிரிக்கப்படுகிறது.
தைராய்டு ஏற்பட முக்கியக் காரணம் உணவு முறையே. பதப்படுத்தப்பட்ட உணவுகளில் சேர்க்கப்படும் பொருள்கள்தான் தைராய்டு சுரப்பியை சிதறடிக்கச் செய்துவிடுகிறது. இதனால் சத்துக் குறைபாடு உண்டாகிறது.
குறிப்பாக பெண்களுக்கு மாதவிடாய் தள்ளிப்போவது, கருச்சிதைவு, கருமுட்டையில் கட்டி போன்றவை உண்டாகின்றன. இதனால்தான் பெண்கள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.
தைராய்டு குறைபாடுகளைப் போக்குவதில் மத்ஸ்யாசனம், உத்தானபாதாசனம், சர்வாங்காசனம் போன்ற ஆசனங்கள் உதவும். அத்துடன் பிட்யூட்டரி சுரப்பியின் செயல்பாடுகளை அதிகரிக்கவும் இந்த ஆசனங்கள் உதவும்.
விபரீதகரணி என்ற ஆசனம் செய்வதால் கழுத்துப் பகுதியில் ரத்த ஓட்டம் சரியாகும். இதனால் தைராய்டு சுரப்பிகள் நன்றாக வேலை செய்யும். ஹாலாசனம் செய்வதால் தலைக்குப் பின் பகுதியிலுள்ள பிட்யூட்டரி சுரப்பி நன்றாக வேலை செய்யும். அத்துடன் தைராய்டு, பாரா தைராய்டு ஆகிய சுரப்பிகள் நன்றாக சுரக்கத் தொடங்கும். ஆக, உடல்நலத்துக்குத் தேவையான ஹார்மோன்கள் அனைத்தும் சீராகச் சுரக்கும்.