வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: ஞாயிறு, 7 ஜூன் 2015 (20:12 IST)

யுக்ரெய்ன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்புக்கு எதிராக ஒன்றுபட வேண்டும்

யுக்ரெய்னில் ரஷ்யா ஆக்கிரமிப்பில் ஈடுபடுவதாக வர்ணித்துள்ள அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, உலகத் தலைவர்கள் அதனை எதிர்த்து நிற்கவேண்டும் என்று என்று கோரிக்கை விடுத்துள்ளார்.


தொழில் வளர்ச்சியடைந்த முன்னணி நாடுகளின் ஜி-7 மாநாட்டில் கலந்துகொள்ள முன்னதாக ஒபாமா இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார்.
 
தெற்கு ஜெர்மனியில் நடக்கவுள்ள இந்த மாநாட்டில் ரஷ்யாவும் வழமையில் அழைக்கப்படும்.
 
ரஷ்யா மீது விதிக்கப்பட்டுள்ள தடைகள் வரும் ஜூலை மாதம் காலாவதியாகின்ற நிலையில், அவற்றை மாற்றுவது தொடர்பான விவாதங்கள் நடக்க வாய்ப்புள்ளதாக ஐரோப்பிய கவுன்சிலின் தலைவர் டொனால்ட் டஸ்க் தெரிவித்துள்ளார்.
 
ஆனால், அந்தத் தடைகளை மேலும் இறுக்கமாக்குவது தொடர்பாகவே அந்தப் பேச்சுக்களும் இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
 
இபோலா தொற்றுநோய் போன்ற அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதற்கான உலகளாவிய நடவடிக்கைகளில் கடுமையான சீர்திருத்தங்களைக் கொண்டுவரும் ஜெர்மனியின் திட்டம் பற்றியும் இந்த மாநாட்டில் ஆராயப்படவுள்ளது.
 
பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்காக வளர்ந்துவரும் நாடுகளுக்கு வழங்கப்பட வேண்டிய உதவிகள் பற்றியும் ஜெர்மனி இங்கு வலியுறுத்தவுள்ளது.
 
ஃபிஃபா மீதான அண்மைக்கால ஊழல் குற்றச்சாட்டுக்களின் பின்னணியில், ஊழல் விவகாரம் பற்றி பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கெமெரன் ஜி-7 மாநாட்டில் பேசவுள்ளார்.