1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. உலகச் செய்திகள்
Written By Suresh
Last Modified: வியாழன், 15 மே 2014 (11:06 IST)

மோடிக்கு அமெரிக்க விசா குறித்து அந்நாட்டு வெளியுறவுதுறை அமைச்சர் கருத்து

நரேந்திர மோடிக்கு அமெரிக்க விசா வழங்குவதற்கு ஆதரவாக அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜென் பசாகி கருத்து தெரிவித்துள்ளளார்.
 
கடந்த 2002ஆம் ஆண்டு கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை தொடர்ந்து குஜராத்தில் கலவரம் மூண்டது. இதை முதலமைச்சர் நரேந்திர மோடி கட்டுப்படுத்த தவறிவிட்டார், இது மனித உரிமை மீறல் என்று கூறி, அமெரிக்கா மோடிக்கு விசாவை 2005ஆம் ஆண்டு ரத்து செய்தது.
 
பாஜக பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி அறிவிக்கப்பட்ட பின்னர், அவரைக் கடந்த பிப்ரவரி மாதம், இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் நான்சி பவல் சந்தித்துப் பேசினார். இது அவருக்கு விசா வழங்குவதற்கு உரிய முன்னேற்பாடாகக் கருதப்பட்டது. இந்நிலையில் அமெரிக்க அதிகாரிகள், இந்தியாவின் அடுத்த பிரதமராக யார் தேர்ந்தெடுக்கப்பட்டாலும், அவர்களை அமெரிக்கா வரவேற்கும் என்று கூறினர்.
 
இந்நிலையில், வாஷிங்டனில் அமெரிக்க வெளியுறவுதுறை செய்தி தொடர்பாளர் ஜென் பசாகி “நாடுகளின் தலைவர்கள், அரசு தலைவர்கள்  ஆகியோர் ஏ1 விசா பெறுவதற்கு குடியுரிமை மற்றும் தேசியத்துவ சட்டத்தின்படி தகுதி படைத்தவர்கள். எந்த ஒரு தனிநபரும் தாமாகவே அமெரிக்க விசாவுக்கு தகுதி பெற்றுவிட முடியாது” என்றும் “விசா விண்ணப்பங்கள் குறித்து நாங்கள் பேசுவதில்லை. இந்தியாவில் புதிய அரசு தேர்ந்தெடுக்கப்படும்போது, அவர்களுடன் இணைந்து பணியாற்ற எதிர்பார்த்து காத்திருக்கிறோம். தேர்தல் முடிவுகள் இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், அதுபற்றி விரிவாக யூகிக்கமாட்டேன்” என்று பசாகி கூறியுள்ளார். இது மேடிக்கு விசா வழங்குவதற்கு ஆதரவான கருத்தாக கருதப்படுகிறது.