1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. உலகச் செய்திகள்
Written By Webdunia

பார்வையற்றவர்களை காதலில் விழவைத்த வழிகாட்டி நாய்கள்

வளர்ப்பு நாய்களால் வாழ்க்கை‌த் துணையையே ஏற்படுத்தி தர முடியும் என்பதை இங்கிலாந்தில் நடைபெற்ற பார்வையற்ற ஒரு ஜோடியின் திருமணம் நிரூபித்துள்ளது.
FILE

இங்கிலாந்தில் உள்ள ஸ்ட்ரோக்-ஆன்-ட்ரெண்ட் நகரை சேர்ந்தவர் மார்க் கேஃபே (51). பிறவியிலேயே பார்வையை இழந்த இவருக்கு வளர்ப்பு நாய்கள்தான் வழிகாட்டும் துணையாக இருந்து வந்துள்ளன. இவரது வீட்டின் அருகில் கடந்த 2012-ம் ஆண்டு இத்தகைய வழிகாட்டி நாய்களுக்கான சிறப்பு பயிற்சி முகாம் நடைபெற்றபோது. அந்த முகாமில் பயிற்சி பெறுவதற்காக தனது நாயை மார்க் கேஃபே அழைத்து சென்றார். அந்த நாயின் பெயர் ராடன், ராடன் அதே முகாமில் பயிற்சி பெற வந்த இன்னொரு பெண் நாயான வெனிசுடன் காதல் வயப்பட்டது.

முகாமின் போது ஒன்றையொன்று மோப்பம் பிடித்தபடி சுற்றி வருவதைக் கண்டவர்கள் பெண் நாயின் உரிமையாளர் கிளாரி ஜான்சனிடம் (50) இதனை கேலியாக சுட்டிக் காட்டினர். தனது 24வது வயதில் சர்க்கரை நோயின் தாக்கத்தால் பார்வையை பறிகொடுத்த கிளாரி, அந்த பயிற்சி காலமான ஒரு வாரம் முழுவதும் முகாம் நடைபெறும் இடத்திலேயே தங்கி இருக்க நேர்ந்தது.
FILE

அப்போது மார்க் கஃபேவுடன் பழகத் தொடங்கிய கிளாரியின் நட்பு, நாளடைவில் காதலாக மலர்ந்தது. இதே மனநிலையில் இருந்து வந்த மார்க் கஃபே காதலர் தினத்தின் போது, தனது காதல் உணர்வை கிளாரியிடம் கொட்டித் தீர்த்தார். இதனையடுத்து, விழியிழந்த வாழ்க்கையை மேற்கொண்டு வந்த இருவரும், ஒருவருக்கொருவர் துணையாக ஒளிநிறைந்தாக வாழ்வது என்று தீர்மானித்தனர்.
FILE

ஸ்ட்ரோக் ஆன் ட்ரெண்ட் நகரின் பார்லஸ்டன் அப்பர் ஹவுஸ் ஓட்டலில் நேற்று நடைபெற்ற இவர்களின் திருமண நிகழ்ச்சியின் தொடக்கம் முதல் இறுதி வரை மாப்பிள்ளை தோழனாகவும், மணப்பெண் தோழியாகவும் காதல் ஜோடியான ராடனும், வெனிசும் உடன் இருந்து, தங்களது எஜமானர்களின் திருமண சடங்குளில் பரவசத்துடன் கலந்து கொண்டன.

தங்களது வாழ்க்கையில் நிகழ்ந்த இந்த எதிர்பாராத திருப்பம் பற்றி கருத்து தெரிவித்த மார்க் கேஃபே, ‘உங்களுக்கும் வாழ்க்கை துணை தேவைப்பட்டால் வழிகாட்டி நாய்களுக்கான பயிற்சி முகாமில் கலந்து கொள்ளுங்கள். மனைவி கிடைப்பாள்’ என்று சிரித்துக்கொண்டே கூறினார்.