1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. உலகச் செய்திகள்

தைவா‌னி‌ல் ‌மித ‌நிலந‌டு‌க்க‌ம்!

தைவா‌‌ன் ஹுவா‌லியென் ‌நிலநடு‌க்க‌ம் வா‌னிலை ஆ‌ய்வு மைய‌ம்
தைவா‌‌ன் நா‌ட்டி‌ன் ‌கிழ‌க்கு‌ப் பகு‌தி‌யி‌ல் உ‌ள்ள ‌‌தீ‌வி‌ல் இ‌ன்று கா‌லை ‌மிதமான ‌நிலநடு‌க்க‌ம் ஏ‌ற்ப‌ட்டது. ‌இது ரி‌க்ட‌ர் அளவு கோ‌லி‌‌ல் 5.4 ஆக ப‌திவா‌கி உ‌ள்ளது.

அ‌திகாலை 2.55 ம‌ணி‌க்கு ஏ‌ற்ப‌ட்ட இ‌ந்த ‌நிலநடு‌க்க‌த்தா‌ல் க‌ட்டட‌ங்க‌ள் குலு‌ங்‌கியது. எ‌னினு‌ம் இ‌ந்த ‌நிலநடு‌க்க‌த்தா‌ல் உ‌யி‌ர்‌ச்சேத‌ம், பொரு‌ட்சேத‌ம் ஏது‌ம் ஏ‌‌ற்ப‌ட்டதாக தகவ‌ல்க‌ள் இ‌ல்லை எ‌ன்று தைவா‌ன் நா‌ட்டு அ‌திக‌ா‌ரிக‌ள் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளன‌ர்.

தலைநக‌ர் தைபே‌யி‌ல் இரு‌ந்து த‌ெ‌ன் ‌கிழ‌க்கே 120 ‌கிலோ ‌மீ‌‌ட்ட‌ர் தொலை‌வி‌ல் உ‌ள்ள ஹுவா‌லியென் நக‌ர‌த்‌தி‌ல் இரு‌ந்து ‌கிழ‌க்கே 10 ‌கி.‌மீ. தொலைவு‌க்கு இ‌ந்த ‌நிலநடு‌க்க‌ம் மைய‌ம் கொ‌ண்டிரு‌ந்ததாக தைவா‌ன் நா‌ட்டு, ம‌த்‌திய வா‌னிலை ஆ‌ய்வு மைய‌ம் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.