புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By siva
Last Updated : செவ்வாய், 22 ஜூன் 2021 (07:36 IST)

ராமரை அடுத்து யோகாவுக்கும் சொந்தம் கொண்டாடிய நேபாள பிரதமர்!

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் ராமர் நேபாளத்தில் தான் பிறந்தார் என்றும் ராமர் நேபாளின் கடவுள் என்றும் அந்நாட்டின் பிரதமரான ஷர்மா ஒலி கூறி வந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது யோகாவுக்கும் அவர் சொந்தம் கொண்டாடி உள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது 
 
நேற்று உலக யோகா தினம் கொண்டாடப்பட்டதை அடுத்து பிரதமர் மோடி உரையாடினார் என்பதும் அவரது உரை உலக அளவில் கவனம் பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நேபாள பிரதமர் ஷர்மா ஒலி அவர்கள் கூறுகையில் ’யோகா நேபாளத்தில் தான் உண்டானது என்றும் யோகா உருவானபோது இந்தியா என்ற ஒரு நாடு இல்லை என்றும் இந்தியா பல ராஜ்யங்கள் ஆக இருந்தது என்றும் கூறினார் 
 
ஆனால் அதே நேரத்தில் யோகாவை சர்வதேச அளவில் கொண்டு செல்ல எங்கள் நாடு தவறிவிட்டது என்றும் அதை பயன்படுத்தி யோகாவை பிரதமர் மோடி சர்வதேச அளவில் அங்கீகாரம் பெற்று விட்டார் என்றும் கூறியுள்ளார். ராமரை அடுத்து யோகாவுக்கும் நேபாளம் சொந்தம் கொண்டாடி உள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது