1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 4 மே 2018 (09:47 IST)

அமெரிக்க மேயரான WWE கேன்

பிரபல மல்யுத்த வீரரான கேன் அமெரிக்காவில் நடைபெற்ற மேயர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார்.
WWE எனப்படும் மல்யுத்த போட்டியில் பிரபலமானவர் தான் கேன். இவரது இயற்பெயர் க்ளென் ஜேகோப்ஸ். முகத்தில் முகமூடியுடன் போட்டிக்கு வரும் இவருக்கு ஏராளமான ரசிகர் பட்டாளம் உண்டு. தனது தனித்திறமையால் WWE இல் இன்று வரை நிலைத்து இருக்கிறார். இவரது சகோதரர் தி அண்டர்டேக்கர். 
இந்நிலையில் கேன் அமெரிக்காவின் டென்னிசி மாகாணத்தில் உள்ள காக்ஸ் கவிண்டியில் மேயர் பதவிக்கு போட்டியிட்டார். தேர்தல் முடிவில் கேன் 17 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளார். வெற்றி பெற்ற கேன் தனது ஆதரவாளர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.