திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : புதன், 30 செப்டம்பர் 2020 (18:19 IST)

தமிழகத்தில் 46,263 பேர் மட்டுமே கொரோனா நோயாளிகள்: சுகாதாரத்துறை தகவல்

தமிழகத்தில் புதிதாக 5,659 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இதனையடுத்து தமிழகத்தில் கொரோனாவால் மொத்த பாதிப்பு 5,97,602 ஆக உயர்வு என்றும் தமிழக சுகாதாரத்துறை தகவல்
 
மேலும் தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 67 பேர் உயிரிழப்பு என்றும், இதனையடுத்து தமிழகத்தில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 9,520 என்றும் தமிழக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது
 
மேலும் தமிழகத்தில் கொரோனா பாதிப்பிலிருந்து இன்று ஒரே நாளில் 5,610 பேர் குணமடைந்தனர்; என்றும், இதுவரை தமிழகத்தில் மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 5,41,819 ஆக உயர்வு என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 46,281ல் இருந்து 46,263 ஆக குறைந்தது என்றும் தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது
 
மேலும் சென்னையில் மேலும் 1,295 பேருக்கு கொரோனா பாதிப்பு என்றும், சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் 4,364 பேருக்கு கொரோனா பாதிப்பு என்றும் தமிழக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது