சனி, 23 செப்டம்பர் 2023
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: புதன், 24 மே 2023 (13:18 IST)

கொரோனாவை விட ஆபத்தான பெருந்தொற்று ஏற்பட வாய்ப்பு: உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பெரும் உயிர் சேதங்களையும் பொருள் சேதங்களையும் ஏற்படுத்திய நிலையில் தற்போது கொரோனாவை விட மிக ஆபத்தான பெருந்தொற்றுகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக உலக சுகாதார மையம் எச்சரித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
கொரோனா தொற்று வந்த போது அதனை எதிர்கொள்ள உலகம் தயாராக இல்லை என்றும் அதனால் மிக பெரிய நெருக்கடி ஏற்படுத்தியது என்று கூறிய உலக சுகாதார மையம், புதிய தொற்று நோய் விரைவில் மனித உலகை கதவை தட்டலாம் என்றும் அதற்கு நாம் இப்போது என்ன செய்ய வேண்டும்? எப்படி செய்ய வேண்டும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.
 
கொரோனாவை விட மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய ஆபத்தான தொற்றுகள் பரவ வாய்ப்பு இருப்பதாகவும் அது பரவாமல் தடுப்பதற்கான பேச்சுவார்த்தைக்கு உலக நாடுகள் முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்றும் உலக சுகாதார ஆன நிறுவனம் எச்சரித்து உள்ளது
 
Edited by Mahendran