வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. உலகச் செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 12 மே 2014 (23:28 IST)

தென்கொரிய- வடகொரிய வார்த்தைப் போர் தீவிரம்

வடகொரியா உண்மையில் ஒரு நாடே அல்ல, அது கூடிய விரைவில் காணாமல்போக வேண்டும் என்று தென்கொரிய அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

இரண்டு நாடுகளுக்கும் இடையே நடந்துவரும் வார்த்தைப் போரின் தொடர்ச்சியாக இந்தக் கருத்து வெளிவந்துள்ளது.
 
வடகொரியாவில் மனித உரிமைகளோ சுதந்திரமோ இல்லை என்று கூறியுள்ள தென்கொரிய பாதுகாப்புத்துறை பேச்சாளர், கிம் ஜோங் ஊன் என்ற (வடகொரியாவின் தலைவர்) தனியொரு மனிதரின் நன்மைக்காக மட்டுமே வடகொரிய இருப்பதாகவும் கூறியுள்ளார்.
 
வடகொரியா அண்மையில், தென்கொரியாவின் அதிபர் பக் குன் ஹேயி ஒரு பாலியல் தொழிலாளி என்றும் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா ஒரு கெட்ட குரங்கு ஒன்றும் ஒப்பிட்டு கருத்து வெளியிட்டிருந்தது.
 
அவ்வப்போது முறுகல்நிலையில் இருந்துவரும் இரண்டு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் இப்போதும் மோசமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.