வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 5 ஜனவரி 2018 (16:26 IST)

குழந்தை பெற்ற அரை மணி நேரத்தில் விபச்சாரத்தில் ஈடுபட்ட பெண்!

பிரிட்டனின் கிழக்கு யார்க்‌ஷயரில் உள்ள ஹல் நகரில் விபச்சாரம் தடை செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் அங்கு சட்டத்தை மீறி மறைமுகமாக விபச்சாரம் அங்கு நடந்து தான் வருகிறது. ஒரு பெண் குழந்தை பெற்ற அரை மணி நேரத்தில் விபச்சாரம் செய்த சம்பவமும் நடந்துள்ளது அங்கு.
 
கிழக்கு யார்ஷயர் பகுதியின் ஹல் நகர் விபச்சாரம் தடை செய்யப்பட்ட பகுதி. 2014-ஆம் ஆண்டு முதல் அங்கு இந்த தடை இருக்கிறது. ஆனால் அங்குள்ள பெண்கள் பணத்துக்காக காவல்துறைக்கு தெரியாமல் விபச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
 
இதுகுறித்து பேசிய காவல்துறை அதிகாரி ஒருவர், கர்ப்பமாக இருந்த ஒரு விபச்சாரி, குழந்தை பெற்ற அரை மணி நேரத்தில் மீண்டும் விபச்சாரத்தில் ஈடுபட்ட சம்பவம் நடந்துள்ளது இங்கு. பணத்துக்காக இவர்கள் இப்படி செய்கிறார்கள். போதை மருந்து பிரச்சனையும் இங்கு அதிகமாக உள்ளது.
 
இந்த பகுதியில் உள்ள 40 விபச்சாரிகளின் வயது 20 முதல் 30 வரை இருக்கும். கடந்த வருடம் அக்டோபரில் 29 விபச்சாரிகள் காவல் துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.