செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 27 ஜூன் 2019 (10:35 IST)

பாட்டியின் விபரீத ஆசை; அசராமல் நிறைவேற்றிய பேத்தி: போலீஸுக்கு வந்த வேலை!!

பிரிட்டனில் வசித்து வரும் 93 வயது பாட்டியின் விபரீத ஆசையை பேத்தி போலீஸார் மூலம் மறைமுகமாக நிறைவேற்றி வைத்துள்ளார். 
 
பிரிட்டனின் ஜோஷ்சி பேர்ட்ஸ் என்னும் 93 வயது மதிக்கதக்க பாட்டிக்கு நான் இதுவரை காவல் துறையினரால் கைது செய்யப்படவில்லை என குறைப்பட்டு வந்தாராம். இது குறித்து ஒருமுறை தனது பேத்தியுடம், என்னை ஒருமுறௌ கூட காவல் துறையினர் கைது செய்ததில்லை. அப்படி கைது செய்தால் அந்த அனுபவம் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக்கொள்வதே எனது கடைசி ஆசை என கூறியுள்ளார். 
பாட்டியின் கடைசி ஆசையை நிறைவேற்ற நினைத்த பேத்தி நேராக காவல் நிலையம் சென்று எனது பாட்டியை கைது செய்யும்படி கேட்டுள்ளார். ஆனால், போலீஸார் அதற்கு சட்டத்தில் இடமில்லை என கூற, போலீஸாருக்கு தனது பாட்டியின் ஆசையே இதுதான் என கூறி விளக்கி அவர்களை ஒப்புக்கொள்ள வைத்துள்ளார். 
 
போலீஸாரும் திடிரென வீட்டிற்கு சென்று அந்த பாட்டியை கைது செய்துள்ளனர். கைது செய்யப்படுவதால் ஏன் எதற்கு என கேட்காமல் பாட்டி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். இந்த சம்பவம் குறித்து தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு போலீஸாருக்கு நன்றி தெரிவித்துள்ளார் அந்த பாட்டியின் பேத்தி.