1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: திங்கள், 13 மார்ச் 2023 (21:55 IST)

குரைத்துக்கொண்டிருந்த நாயை உயிருடன் புதைத்த மூதாட்டி!

dogs
பிரேசில் நாட்டில் ப்ளானுரா என்ற பகுதியில் வசித்து வரும் 82 வயது மூதாட்டி ஒருவர் தன் அண்டை வீட்டில் நாய் குரைத்துக் கொண்டே இருந்ததால்  அதை உயிரோடு புதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரேசில் நாட்டில் ப்ளானுரா என்ற பகுதியில் வசித்து வருபவர்  82 வயது மூதாட்டி. இவரது வீட்டிற்கு அருகில்,  வசித்து வருபவர் 33 வயது பெண். இவர் தன் வீட்டில் ஒரு நாயை வளர்த்து வருகிறார்.

இந்த நாய் தினமும் இரவில் குரைத்துக் கொண்டிருப்பதால் மூதாட்டிக்கு தொந்தரவாக இருந்துள்ளது. இதனால்,  உறக்கமின்றி அவதிப்பட்ட மூதாட்டி, ஒரு நாள் இரவில் தன் தோட்டத்தில், குழிதோண்டி, அந்த நாயை புதைத்துள்ளார்.

தன் நாயைக் காணாமல் பதறிப்போன பெண், மூதாட்டியிடம் இதுபற்றிக் கேட்டுள்ளார். நடந்தை அப்படியே மூதாட்டி அவரிடம் கூறியதால் அதிர்ச்சியைந்த இளம்பெண் ஒன்றை மணி நேரத்தில், அந்த  நாயை குழியில் இருந்து உயிருடன் மீட்டுள்ளார்.

அதன்பின்னர், அப்பெண் போலீஸில் புகாரளிக்கவே, இந்தச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸார் மூதாட்டியை விலங்குகளைக் கொடுமைப்படுத்தியதாகக் கைது செய்துள்ளனர்.