வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 1 ஜூன் 2020 (08:16 IST)

கருப்பின நபரைக் கொன்ற அமெரிக்க போலீஸ் – மனைவிக் கொடுத்த தண்டனை என்ன தெரியுமா?

அமெரிக்காவில் பிளாய்ட் என்ற கருப்பின நபரை போலீஸார் நிறவெறியுடன் கொலை செய்த சம்பவம் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் உள்ள மின்னபொலிஸ் என்ற நகரில் கடந்த 25ஆம் தேதி கருப்பின இளைஞர் ஒருவரை விசாரணை செய்த போலீசார் அவரை கீழே தள்ளி கழுத்தில் காலால் நெறித்து கொலை செய்தார். அது சம்மந்தமாக வீடியோ ஒன்று பரவி உலகெங்கும் கண்டனங்களைப் பெற்றது. இதனையடுத்து கருப்பின இளைஞரை கொலை செய்த போலீஸ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து போராட்டங்கள் வெடித்தன. நாடு முழுவதும் நடந்து வரும் இந்த போராட்டத்தை கட்டுப்படுத்த போலீசாருடன் ராணுவத்தினரும் ஈடுபட்டு வருகின்றனர் .

இதையடுத்து கருப்பின இளைஞரை கொலை செய்த போலீசாரை கைது செய்து அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. இந்நிலையில் அந்த போலீஸ்காரரின் மனைவி அவருக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பியுள்ளார். தன் கணவரின் செயல் தன்னை மனதளவில் மிகவும் பாதித்ததாகவும், அதனால் ஆழ்ந்த வேதனைக்குள்ளானதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.