வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : சனி, 20 ஜூலை 2024 (15:12 IST)

கைலாசா நாடு எங்கு உள்ளது.? நாளை அறிவிக்கிறார் நித்தியானந்தா..!!

கைலாசா நாடு எங்கு உள்ளது என்று நாளை அறிவிக்க இருப்பதாக நித்தியானந்தா தெரிவித்துள்ளார்.
 
பாலியல் உள்ளிட்ட பல்வேறு சர்ச்சைகளுக்கு உள்ளான  நித்தியானந்தா மீது தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட நாட்டின் பல்வேறு மாநிலங்களில் வழக்குகள் நிலுவையில் இருந்து வருகின்றன. வழக்கு தொடர்பாக காவல் துறையினர் நித்தியானந்தாவை தேடி வரும் நிலையில், கடந்த 2019ம் ஆண்டே அவர் வெளிநாடு தப்பி சென்றுவிட்டதாக சொல்லப்படுகிறது. 
 
தமிழக காவல் துறை தொடங்கி தேசிய புலனாய்வு அமைப்பு வரை தேடியும் நித்தியானந்தாவை கண்டுபிடிக்க முடியவில்லை. கைலாசா எனும் தனித்தீவை உருவாக்கி அங்கு உள்ளதாக நித்தியானந்தா கூறியிருந்தார். இந்நிலையில் கைலாசா எங்கு இருக்கிறது என்ற தகவலை குரு பூர்ணிமா தினமான நாளை அறிவிப்பேன் என நித்தியானந்தா தெரிவித்துள்ளார். 
 
இது தொடர்பாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள நித்தியானந்தா தங்கள் நாட்டில் பணத்திற்கு மதிப்பு கிடையாது என்றும் உணவு, கல்வி, மருத்துவம் உள்ளிட்ட அனைத்தும் இலவசமாகவே வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். கைலாசாவில் நீங்கள் எவ்வளவு நாள் வேண்டுமானாலும் தங்கலாம் என்று அவர் கூறியுள்ளார். 


செலவு கிடையாது என்றும் மக்களுக்கு எந்தவிதமான வரியும் கிடையாது என்றும்  காவல்துறை, ராணுவம் இல்லாத அகிம்சை தேசசமாக கைலாசா இருக்கும் என்றும் நித்தியானந்தா தெரிவித்துள்ளார்.