செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : ஞாயிறு, 29 ஜனவரி 2017 (16:44 IST)

அமெரிக்கா இல்லைனா என்ன, இங்கே வாங்க: கனடா பிரதமர்

அமெரிக்க அதிபர இஸ்லாமிய நாடுகளில் இருந்து மக்கள் குடியேறுவதற்க்கு தடை விதித்ததை அடுத்து கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடு கனடா உங்களை வரவேற்கிறது என்று தெரிவித்துள்ளார்.


 

 
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் 7 இஸ்லாமிய நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவில் குடியேறுவதற்கு தடை உத்தரவை பிறப்பித்தார். இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 
 
இந்நிலையில் கனடா நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடு, தனது டுவிட்டர் பக்கத்தில் வெல்கம் டூ கனடா என்ற கருத்தை பதிவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-
 
அடக்குமுறை, போர் மற்றும் பயங்கரவாதத்தில் இருந்து வருபவர்களை கனடா வரவேற்கும். பன்முகத்தன்மை எங்கள் பலம், என்று கூறியுள்ளார்.