வியாழன், 2 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 22 டிசம்பர் 2020 (10:32 IST)

வெடித்து சிதறிய எரிமலை; சுமார் 165 அடிக்கு தூக்கி வீசப்பட்ட லாவா!!

அமெரிக்காவின் ஹவாய் தீவில் கிலாவியா என்னும் எரிமலை வெடித்து சிதறிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. 
 
அமெரிக்காவின் ஹவாய் தீவில் கிலாவியா என்னும் எரிமலை அமைந்துள்ளது.  இந்த எரிமலை சமீபத்தில் வெடித்துச் சிதறியது. இதனால் எரிமலையில் இருந்து வெளியேறிய லாவா சிதறல்கள் சுமார் 165 அடி உயரத்துக்குத் தூக்கி வீசப்பட்டது. 
 
எரிமலையிலிருந்து வெளியேறிய லாவா அடிவாரத்தில் உள்ள ஒரு குளத்தில் சென்று சேர்ந்தது. இதனால் அப்பகுதியில் 4 புள்ளி 4 ரிக்டர் அளவில் நில அதிர்வு ஏற்பட்டது. இந்நிலையில் இதன் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.