வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. உலகச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 15 மே 2014 (11:05 IST)

சீனத் தொழிற்சாலைகளை எரித்த வியட்நாமியர்

வியட்நாமில் நடக்கும் சீனா எதிர்ப்பு போராட்டங்கள் வன்முறை வடிவம் எடுத்திருக்கின்றன.

தெற்கு வியட்நாமில் ஆர்பாட்டம் நடத்திய ஆயிரக்கணக்கான சீன எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்கிருக்கும் வெளிநாட்டு தொழிற்சாலைகளை அடித்து நொறுக்கியதோடு அவற்றில் சிலவற்றுக்கு தீவைத்தும் எரித்தனர்.
 
சீனாவுக்கும் வியட்நாமுக்கும் இடையில், யாருக்கு சொந்தமானது என்கிற தாவாவில் இருக்கும் தென்சீனக்கடற்பகுதியில், சீனா தனது எண்ணெய் துரப்பண கப்பல்களை கொண்டுவந்து நிறுத்திய செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த வியட்நாமிய ஆர்பாட்டக்காரர்கள் போராட்டம் நடத்திவருகிறார்கள்.
 
இவர்களால் இன்று குறிவைக்கப்பட்ட தொழிற்சாலைகள் சில தாய்வான் நாட்டைச் சேர்ந்தவை. அவற்றை சீனாவுக்கு சொந்தமானவை என்று இந்த ஆர்பாட்டக்காரர்கள் தவறாக அடையாளப்படுத்திக்கொண்டார்கள்.
 
இந்த போராட்டங்கள் நாட்டின் வேறு பகுதிகளுக்கும் பரவியதைத் தொடர்ந்து பல வர்த்தக நிறுவனங்களும் தொழிற்சாலைகளும் திறக்கவில்லை.
 
இந்த ஆர்பாட்டக்காரர்களில் நூற்றுக்கணக்கானவர்களை காவல்துறையினர் கைது செய்திருக்கிறார்கள். இந்தப் பிரச்சனையில் வியட்நாம் அமைதிகாக்கவேணும் என்று சீனா கேட்டுக்கொண்டிருக்கிறது.