கனடா நாட்டின் உயர் நீதிமன்ற நீதிபதியாக காரைக்குடி வள்ளியம்மை


K.N.Vadivel| Last Updated: சனி, 19 டிசம்பர் 2015 (01:58 IST)
கனடா நாட்டின் உயர் நீதிமன்ற நீதிபதியாக தமிழகத்தை சேர்ந்த வள்ளியம்மை நியமிக்கப்பட்டுள்ளார்.
 
 
கனடா நாட்டில், வான்கூவரில் உள்ள பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் 1992ஆம் ஆண்டு சட்டக் கல்வியை முடித்த வள்ளியம்மை, 1995 ஆம் ஆண்டு முதல் வழக்கறிஞராக தனது பணியை தொடங்கினார். பல்வேறு வழக்குகளில் வெற்றிக்கனியை பறித்தார். இந்த நிலையில், பிரிட்டிஷ் கொலம்பியா மாநில உயர் நீதிமன்ற நீதிபதியாக வள்ளியம்மை நியமிக்கப்பட்டுள்ளார்.
 
கனடா நாட்டின் உயர் நீதிமன்ற நீதிபதியாக வள்ளியம்மை நியமனம் முலம் உலக அளவில் தமிழர்களுக்கு மேலும் பெருமை கிடைத்துள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :