வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : ஞாயிறு, 14 ஜூன் 2020 (07:22 IST)

நான் வெற்றி பெறாவிட்டால் நாட்டுக்கு நல்லதல்ல: அதிபர் தேர்தல் குறித்து டிரம்ப்

நவம்பர் மாதம் நடைபெறவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் நான் வெற்றி பெறாவிட்டால் நாட்டுக்கு நல்லதல்ல என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
அமெரிக்க அதிபர் தேர்தல் கடந்த 2016ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி நடைபெற்றது. அதில் டொனால்ட் டிரம்ப் மற்றும் ஹிலாரி கிளிண்டன் மோதினர். அனைத்து கருத்துக்கணிப்புகளும் ஹிலாரி கிளிண்டனே வெற்றி பெறுவார் என்று கூறிய நிலையில் ஆச்சரியமாக டிரம்ப் வெற்றி பெற்றார் அவரது வெற்றி இன்னும் மர்மமாக உள்ளது.
 
இந்த நிலையில் வரும் நவம்பர் மாதம் அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. கொரோனா பாதிப்பு, கருப்பினத்தவர் மீதான பாகுபாடு உள்ளிட்டவைகளால் டிரம்ப் மீது அமெரிக்க மக்கள் கடும் அதிருப்தி உள்ளனர். இந்த நிலையில் அமெரிக்க அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிட முடிவு செய்துள்ள டிரம்ப், இந்த கொரோனா பரபரப்பிலும் பிரச்சாரத்தை தொடங்கிவிட்டார். அவர் தனது பிரச்சாரம் ஒன்றில் அடுத்த அமெரிக்க அதிபர் தேர்தலில் நான் வெற்றி பெறாவிட்டால் நாட்டுக்கு நல்லதல்ல என்று கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 
மேலும் டிரம்பை எதிர்த்து டெமாக்ரடிக் கட்சியில் போட்டியிடுவது யார்? என்பது குறித்த அதிகாரபூர்வ தகவல் இன்னும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது