1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 13 மார்ச் 2022 (14:28 IST)

உக்ரைனுக்கு ஆயுதங்கள் வாங்க 200 மில்லியன் டாலர்! – அமெரிக்கா நிதியுதவி!

ரஷ்யாவுக்கு எதிராக போராட உக்ரைனுக்கு ஆயுதங்கள் வாங்க அமெரிக்கா நிதியுதவி செய்துள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடர்ந்துள்ள நிலையில் கடந்த 18 நாட்களுக்கு உக்ரைனின் பல முக்கிய நகரங்களை ரஷ்யா கைப்பற்றியுள்ளது. அதேசமயம் ரஷ்யாவுக்கு எதிராக தனது சிறிய படைபலத்துடன் உக்ரைன் தொடர்ந்து போரிட்டு வருகிறது. இந்நிலையில் உக்ரைனுக்கு பொருளாதார, மருத்துவ உதவிகளுக்கும், ஆயுதம் வாங்குவதற்கும் பல நாடுகள் உதவி செய்து வருகின்றன.

உக்ரைன் படைகளுக்கு ஆயுதம் வாங்க அமெரிக்கா உதவி வரும் நிலையில் தற்போது நான்காவது கட்டமாக 200 மில்லியன் டாலர்கள் நிதியுதவி அளித்துள்ளது. இதுவரை நான்கு கட்டங்களாக உக்ரைனுக்கு ஆயுதம் வாங்க 9 ஆயிரம் கோடி வழங்கியுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.