புதன், 13 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 11 பிப்ரவரி 2022 (11:45 IST)

டெஸ்லா நிறுவனத்தில் இன பாகுபாடு! – நீதிமன்றத்தில் வழக்கு!

பிரபலமான கார் உற்பத்தி நிறுவனமான டெஸ்லா நிறுவனத்தில் தொழிலாளர்கள் இன பாகுபாடுடன் நடத்தப்படுவதாக எழுந்துள்ள புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உலகம் முழுவதும் டெஸ்லா கார் நிறுவனம், ஸ்பேஸ் எக்ஸ் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் மூலமாக பில்லியனராக அறியப்படுபவர் எலான் மஸ்க். இவரது டெஸ்லா கார் நிறுவனம் பேட்டரியில் இயங்கும் அதிவேக கார்கள் தயாரிப்பு மற்றும் விற்பனையில் ஈருபட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த 2020ம் ஆண்டு டெஸ்லா கார் நிறுவனத்தில் ஊழியர்கள் இன பாகுபாட்டோடு நடத்தப்படுவதாக புகார் எழுந்தது. இந்நிலையில் தற்போது பணியிடத்தில் இனபாகுபாடு காட்டப்படுவதாக டெஸ்லா நிறுவனம் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் புகார் அளித்துள்ளனர். இந்நிலையில் இதுகுறித்து தனது இணைய தளத்தில் விளக்கம் அளித்துள்ள டெஸ்லா நிறுவனம் இது உண்மைக்கு புறம்பான, நியாயமற்ற வழக்கு என்று கூறியுள்ளது.