ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 30 ஜூலை 2022 (09:00 IST)

Vogue பத்திரிகைக்கு மனைவியுடன் நெருக்கமான போஸ் – சர்ச்சையில் ஜெலென்ஸ்கி!

உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி மற்றும் அவரது மனைவியுடன் வோக் பத்திரிகையின் அட்டைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ளனர்.


வோக் பத்திரிகைக்கு வோலோடிமிர் ஜெலென்ஸ்கி மற்றும் அவரது மனைவி ஒலெனா ஜெலென்ஸ்கா தங்களின் கிட்டத்தட்ட இரண்டு தசாப்த கால திருமணத்தை பற்றி விவாதித்துள்ளனர். வோக் தனது சமீபத்திய டிஜிட்டல் கவர் நட்சத்திரமாக திருமதி ஜெலென்ஸ்காவின் படத்தை வெளியிட்டது.

உக்ரைனில் போர் ஒரு முக்கியமான புதிய கட்டத்தில் நுழையும் போது, ​​நாட்டின் முதல் பெண்மணி ஒலெனா ஜெலென்ஸ்கா ஒரு முக்கிய வீரராக மாறியுள்ளார். இவர் முன்னணி இராஜதந்திரி மற்றும் அவரது நாட்டின் உணர்ச்சிகரமான எண்ணிக்கையின் முகம் என்று வோக் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

உக்ரைனின் மீதான ரஷியாவின் போர் 150 நாட்களை கடந்துள்ளது. இந்தப் போரில் ஆயிரக்கணக்கானோர் கொன்று குவிக்கப்பட்டனர். சுமார் 1 கோடி பேர் நாட்டை விட்டு வெளியேறி அண்டை நாடுகளில் அகதிகளாக தஞ்சம் புகுந்துள்ளனர்.

இதற்கிடையே, அமெரிக்காவின் பிரபல மாத இதழான வோக் இதழுக்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியும், அவரது மனைவி ஒலனாவும் நேர்காணல் அளித்துள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்த புகைப்படங்களுக்கு வரவேற்பு ஒருபக்கம் இருந்தாலும், போர் நடக்கும் நேரத்தில் இப்படி போட்டோ ஷூட் நடத்தி இணையத்தில் வெளியிடுவது அவசியமா என்ற எதிர் கேள்விகளும் எழுந்துள்ளன. தங்கள் நாடு போரால் அழிக்கப்பட்ட நேரத்தில் ஒரு பத்திரிகைக்கு போஸ் கொடுத்ததற்காக இந்த ஜோடிக்கு எதிராக விமர்சனம் வருகிறது.